விமான பயணம், ரயில் பயணம் இலவசம்... இந்தியாவில் வாயை பிளக்க வைக்கும் எம்பிக்களின் சம்பளம்
சென்னை: இந்தியாவின் ஒரு சராசரி குடிமகனின் ஆண்டு வருமானத்தை விட, ஒரு எம்.பி-யின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் பல மடங்கு அதிகம். அடிப்படைத் தேவைகளான மின்சாரம், தண்ணீர் மற்றும் மருத்துவத்திற்குச் சாமானியர்கள் போராடும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு இவை கோடிக்கணக்கான வரிப்பணத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த விஷயங்களை ழுமையாக சமூகப் பொருளாதார இடைவெளி எம்பிக்களுக்கும் சமானியமக்களுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை பாருங்கள்
2025-26 நிதியாண்டின் நிலவரப்படி இந்தியாவில் எம்பிக்களின் அதிகாரப்பூர்வ சம்பளம் மற்றும் சலுகைகள் விவரங்களை பார்ப்போம்.

அடிப்படை ஊதியம் மற்றும் படிகள் அடிப்படைச் சம்பளம்: ₹1,24,000 (இது 2023-ல் ₹1 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டது).
தொகுதிப் படி : மாதம் ₹87,000 (தொகுதிப் பணிகளுக்காக).
அலுவலகப் படி: மாதம் ₹75,000 (இதில் ₹50,000 உதவியாளர் சம்பளத்திற்கும், ₹25,000 எழுதுபொருள் மற்றும் தபால் செலவுக்கும்).
தினசரிப் படி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் தினமும் ₹2,500 வழங்கப்படுகிறது
பயணச் சலுகைகள்
விமானப் பயணம்: ஆண்டுக்கு 34 இலவச உள்நாட்டு விமானங்கள் (தனிப்பட்ட அல்லது அலுவலகப் பயன்பாட்டிற்கு). அவரது குடும்ப உறுப்பினர்களும் இதில் பயணிக்கலாம்.
ரயில் பயணம்: இந்தியா முழுவதும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் அல்லது முதல் வகுப்பில் இலவச வரம்பற்ற பயணம்.
சாலைப் பயணம்: தனது தொகுதியில் கிலோமீட்டருக்கு ₹16 வீதம் மைலேஜ் படி பெறலாம்.
தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் வாடகை இல்லா இல்லம்: டெல்லியில் மூத்த நிலைக்கு ஏற்ப பங்களாக்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
வீட்டு வாடகைப்படி: அரசு இல்லம் பெறாதவர்களுக்கு மாதம் ₹2,00,000 வரை வழங்கப்படுகிறது (இது மெட்ரோ நகரங்களுக்குப் பொருந்தும்).
மின்சாரம் மற்றும் தண்ணீர்: ஆண்டுக்கு 50,000 யூனிட் மின்சாரம் மற்றும் 4,000 கிலோ லிட்டர் தண்ணீர் இலவசம்.
தொடர்பு வசதி: ஆண்டுக்கு 1,50,000 இலவச தொலைபேசி அழைப்புகள் மற்றும் அதிவேக இணைய வசதி.
மருத்துவ வசதி மற்றும் ஓய்வூதியம்மருத்துவ வசதி: CGHS திட்டத்தின்கீழ் எம்.பி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் முழுமையான இலவச சிகிச்சை.
ஓய்வூதியம்: முன்னாள் எம்.பி-க்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹31,000.
ஒரு நபர் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்தால், கூடுதலாகப் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் ₹2,500 வீதம் ஓய்வூதியம் கூடிக்கொண்டே போகும்.
ஒவ்வொரு எம்.பி-க்கும் தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ₹5 கோடி ஒதுக்கப்படுகிறது. இது எம்.பி-யின் நேரடிச் சம்பளம் அல்ல, மக்கள் நலப்பணிகளுக்கான நிதியாகும்.












Click it and Unblock the Notifications