''பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்'' தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை கடிதம்!!
சென்னை: பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியை சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் படுதோல்வியை சந்தித்தது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட பிரேமலதா டெபாசிட்டை இழந்தார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிகவுக்கு பெரும் அடி விழுந்தது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல்
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தேமுதிகவினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலும் தான் நமக்கான இலக்கு.

பீனிக்ஸ் பறவை போல்
பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியைச் சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம். பெரும் பொருட்செலவு செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேமுதிக வெற்றி பெறமுடியும் என நினைக்கும் வார்டுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட வேண்டும்.

தனித்து போட்டி
திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் தனித்து போட்டி என்பதால் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த அறிக்கையை பார்த்த தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதே ஒரு தொகுதியில் வென்றாலும் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றார்.

விரும்பத்தகாத கூட்டணி
ஆனால் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் விரும்பத்தகாத கூட்டணியால் தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை என சொல்லப்படுகிறது. வரும் நகர்ப்புற தேர்தலிலாவது விஜயகாந்த் கட்சி பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து தேமுதிகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications