வருசம் ஒரு லட்சம் ரூபாய்.. வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் .. ‘ஜீவன் உத்சவ்'.. எல்ஐசி சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்.ஐ.சி. சார்பில் ஜீவன் உத்சவ் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்படி ப்ரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் உறுதியளிப்பு தொகை அளிக்கக்கூடிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாழ்நாள் முழுவதும் பெற முடியும். 10 சதவீதம் கியாரண்டி ரிட்டன் லைப் டைம் வரை கிடைக்கும்.

இன்றைக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் காப்பீடு தந்தாலும் காலம் காலமாக மக்களால் விரும்பப்படும் பாலிசி என்றால் அது எல்ஐசி தான்,
அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம் பல்வேறு காப்பீடுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசியில் தான் முதலீடு செய்துள்ளார்கள்.

LIC introduces a new plan named Jeevan Utsav; all you need to know in tamil

இந்நிலையில், எல்.ஐ.சி. சார்பில் ஜீவன் உத்சவ் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவன தலைவர் சித்தார்த் மொஹந்தி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் படி பிறந்து 90 நாட்கள் ஆனவர்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன் பெற முடியும். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் ஆகும் . அதிகபட்சமாக 16 ஆண்டுகள் ஆகும்.

ஒவ்வொரு பாலிசி வருடமும் பிரீமியம் செலுத்திய பிறகு அடிப்படை காப்புத்தொகையின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.40 உறுதியளிப்பு தொகையாக, பிரீமியம் செலுத்தும் காலத்தில் பாலிசி வருட முடிவில் வரவு வைக்கப்படும் என்று எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த பாலிசியின் நன்மை என்னவென்று பார்த்தால், பாலிசியின் பிபிடி கால அளவு முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட கால அளவு நாம் காத்திருக்க வேண்டும்.

அப்படி காத்திருந்த பின்னர், பிரீயம் தொகையாக எவ்வளவு தொகையை நீங்கள் தேர்வு செய்திருந்தீர்களோ அந்த பணத்தினுடைய 10 சதவீதம் பணத்தை வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் வழங்குவார்கள். எடுத்துக்கட்டாக 10 லட்சம் ரூபாய் பாலிசியை சம்மர் சூட்டில் நீங்கள் வாங்கினீர்கள் என்றால், பிரீமியம் பணம் செலுத்தும் காலமான ஐந்து வருடம் முடிந்த பின்னர், அடுத்த ஐந்து வருடம் எந்த ஒரு பணமும் செலுத்த தேவையில்லை.. அந்த ஐந்து வருடம் முடிந்த பின்னர், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் சம்மர் சூட் அமவுண்ட்டான 10 லட்சத்தில் 10 சதவீதம் பணமான ஒரு லட்சம் ரூபாய்யை இந்த பாலிசியின் மூலம் உங்களுக்கு எல்ஐசியில் வழங்குவார்கள். நீங்கள் பிரீமியம் செலுத்தும் காலத்துக்கு பிறகு பாலிசிதாரர் வாழ்வுக்கால பயனாக சீரான வருமான பலன், விருப்ப வருமான பலன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

எல்ஐசியில் உள்ள இன்னொரு பிரபலமான பாலிசி பற்றியும் பார்ப்போம்.. பலருக்கும் பிடித்த எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி (Jeevan Anand Policy) தான் அது. வெறும் 45 ரூபாய் தினமும் செலுத்துவதன் மூலமாக ஒருவர் ரூபாய் 25 லட்சம் ரிட்டன் பெறமுடியும் .

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி மெச்சூரிட்டி : எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி மெச்சூரிட்டி பணம் நிச்சயம் மற்ற பாலிசியை விட அதிகப்படியான முதிர்வு தொகை கிடைக்கும். நீங்கள் பாலிசி போட்ட 21 வருடங்கள் அல்லது 35 வருடங்கள் கழித்து (நீங்கள் தேர்வு செய்யும் பிரீமியம் தொகையை பொறுத்து உங்கள் கைக்கு பெரும் தொகை கிடைக்கும்.

குறைந்த அளவிலான பிரிமியம் தொகையும் இந்த இந்த ஜீவன் ஆனந்த் பாலிசியில் செலுத்த முடியும். எப்படி என்றால் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ரூபாய் 45 என்ற வீதத்தில் ஒரு மாதத்துக்கு 1358 ரூபாயை நீங்கள் பிரீமியம் தொகையாக செலுத்த முடியும். இப்படி செலுத்தினால் 35 வருட கால அளவு பாசிலி செலுத்த வேண்டியதிருக்கும்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதேநேரம் நிலையான அதிகபட்ச வரம்பு எதுவும் என்று எதுவும் இல்லை. நீங்கள் விரும்பும் முதிர்வு தொகையை பெறும் வகையில் பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரீமியம் தொகை செலுத்தலாம்.

இந்த திட்டம் எப்படி என்றால், எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் மற்றும் ஹோல் லைஃப் திட்டங்களின் கலவையாக பார்க்கப்படுகிறது பாலிசிதாரரின் மரணம் மற்றும் சேமிப்பின் போது நிதிப் பாதுகாப்பு என இரண்டு பலன்கள் உண்டு. துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், அவரது குடும்பத்தினருக்கு அடிப்படைத் தொகையில் 125 சதவீதம் உறுதித் தொகையாகக் கிடைக்கும். அல்லது வருடாந்திர பீரிமியத்தில் ஏழு மடங்கு தொகை வழங்கப்படும். பாலிசிதாரர் செலுத்திய மொத்த பிரீமியம் தொகையில் 105 சதவீதத்துக்கு குறையாமல் இறப்புப் பலன் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

பாலிசி காலத்தின் முடிவில் செலுத்தப்படும் முதிர்வுப் பலனுக்கு இந்தத் திட்டம் தகுதி பெறுகிறது. திரும்பப்பெறும் போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் உடன் உறுதி செய்யப்பட்ட தொகை முதிர்வு நன்மையாக வழங்கப்படும். உங்களுடைய பாலிசி காலம் முடிந்த பிறகு பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

பாலிசி பிரீமியம் எப்படி: இந்த பாலிசியை நீங்கள் உங்களுடைய 30ஆவது வயதில் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். மொத்தம் 20 ஆண்டுகள் முதிர்வில் எடுத்தால் நீங்கள் ஆண்டுக்கு ரூ. 30,000 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது மாதத்துக்கு ரூ.2500. அல்லது நாள் ஒன்றுக்கு ரூ. 83 மட்டுமே செலுத்த வேண்டும்.20 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.5 லட்சம் செலுத்தியிருப்பீர்கள். ஆனால் அதற்குப் பலனாக உங்களுக்கு 20 தவணைகளில் ரூ.4.50 லட்சம் நிச்சயம் கிடைக்கும்.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியை பொறுத்தவரை குறைந்தபட்ச உறுதித் தொகை - ரூ. 1 லட்சம் ஆகும்.
குறைந்தபட்ச வயது - 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது - 50 ஆண்டுகள்
அதிகபட்ச முதிர்வு வயது - 75 ஆண்டுகள்
குறைந்தபட்ச பாலிசி காலம் - 15 ஆண்டுகள்
அதிகபட்ச பாலிசி காலம் - 35 ஆண்டுகள் ஆகும். 15 ஆண்டு முதல் 20 அல்லது 21 ஆண்டுகள், அல்லது 35 ஆண்டுகள் வரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+