வருத்தம் தெரிவித்த எல்ஐசி.. இணையதள பக்கம் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியில் மாறியது ஏன்? விளக்கம்
சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தி Default மொழியாக மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் எல்ஐசி வருத்தம் தெரிவித்து ஆங்கிலத்துக்கு பதில் இந்தி மொழி இடம்பெற்றது எப்படி என்பது பற்றி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
மத்திய அரசின் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனித்தனியாக இணையதள பக்கங்கள் உள்ளன. அந்த வகையில் எல்ஐசிக்கும் தனியாக இணையதள பக்கம் உள்ளது. இந்த இணையதள பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதில் Default மொழியாக எப்போதும் ஆங்கிலமே இருக்கும். ஒருவேளை ஆங்கிலம் புரியாதவர்கள் இந்தி மொழியை தேர்வு செய்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கிடையே தான் எல்ஐசியின் இணையதள பக்கம் முழுவதும் ஆங்கிலத்துக்கு பதில் டீபால்ட்டாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இது இந்தி தெரியாத தமிழகம் உள்பட தென்மாநிலங்களை சேர்ந்தவர்களால் விபரங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வரும் நிலையில் எல்ஐசி இணையதள பக்கம் வழியாக இந்தியை திணிக்க முயல்வதாக அரசியல் தலைவர்கள் சாடினர். மேலும் இணையதள பக்கத்தின் ‛டீபால்ட்' மொழியாக மீண்டும் ஆங்கிலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் தற்போது எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் ‛டீபால்ட்' மொழியாக மீண்டும் ஆங்கிலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு எல்ஐசி நிறுவனம் சார்பில் விளக்கத்தோடு மக்கள் எதிர்கொண்ட சிரமத்துக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ LIC India Forever என்ற எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛எங்களின் கார்ப்பரேட் இணையதள பக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொழி Shuffling செய்யவில்லை. தற்போது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இப்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சேவையை வழங்குகிறது. முன்னதாக ஏற்பட்ட சிரமத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் - டீம் எல்ஐசி'' என கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications