Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி கடைக்கும் ஆப்பு? கிராம ஊராட்சிகளில் லைசென்ஸ் கட்டாயமா? அப்ப பாட்டிகளின் வடை கடைகள்? பாமக நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும், நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

Village Rural Areas license TN Government

லைசென்ஸ் கட்டாயம்

இந்த சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணம் செலுத்தி கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும்

பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியலிப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீக்கடைகள், ஹோட்டல்கள்

5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆனால், அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பாமக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை என்றும் விமர்சித்துள்ளது.

பாமக கடும் கண்டனம்

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும்.

அதிக வருவாய் - லைசென்ஸ்

கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருவாயும், லாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இட்லி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

கிராமப்புற கடைகள் உரிமம்

கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது.

அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.

பாட்டிகளின் வடை கடைகள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும்.

இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+