"ஸ்ஸ்ஸ்ஸூன்னு" சத்தம்.. கன்னத்தில் முத்தம்.. அக்குபஞ்சர் + சிகரெட்.. விநோத உலகின், விசித்திர பழக்கம்
சென்னை: இந்த வானம் எங்கிருந்து பார்த்தாலும் ஒன்று போலவே தெரிந்தாலும், மக்கள் எப்போதும் ஒன்று போல இருந்ததில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதால் மக்கள் வேறுபடுகின்றனர். அவைகளில் சிலவற்றை பார்க்கலாமா?
இந்தியாவை பொறுத்த அளவில் "வணக்கம்" சொல்வதற்கு கை குலுக்கிக்கொள்ளும் முறை இருக்கிறது. ஆனால் ஜப்பானை பொறுத்த அளவில் அவர்கள் வணக்கம் சொல்வது குனிந்துதான் சொல்வார்கள்.

அதேபோல உலகின் மற்ற நாடுகளில் இடது கை பழக்கம் கொண்டவர்கள் இயல்பாக இருக்கும் நிலையில், இந்தியாவில் இடது கை பழக்கங்கள் குழந்தை பருவத்திலிருந்தே தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக இடதுகையால் சாப்பிடுவது, இடது கையால் ஏதேனும் பொருளை கொடுப்பது போன்றவை தர்ம சங்கடமான நிகழ்வாக கருதப்படுகிறது.
அப்படியே நீங்கள் பிரான்ஸ் பக்கம் போனால், அங்கு மக்கள் அதிகளவில் சிகரெட் பிடிப்பதை பார்க்க முடியும். அதேபோல அவர்களது உணவில் அதிகமான இனிப்பு பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.. சரி அங்குதான் இப்படியென்றால், ஒரு யூடர்ன் எடுத்து மறுபடியும் ஆசியாவுக்கு வந்தால், இங்குள்ள பல நாடுகளில் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவதை நம்மால் பார்க்க முடியும். உதாரணமாக சீனாவில் பெரும்பாலான மக்கள் உடல்நலக்குறைவுக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவார்கள்.
அக்குபஞ்சர்: அதிலும் அக்குபஞ்சர் மருத்துவமுறை அவர்களிடம் ரொம்ப ஃபேமஸ் ஆகும்.. அதேபோல இவர்கள் சாப்பிடும் நூடுல்ஸ் மற்ற நாட்டில் செய்யப்படும் நூடுல்ஸை விட வித்தியாசமாக இருக்குமாம்.. காரணம், அது நாம் இங்கு சாப்பிடும் நூடுல்ஸ் போல இருக்காது.. இது மிகவும் நீண்டு இருக்கும். அதை அவர்கள் "ஸ்ஸ்ஸ்ஸ்" என சத்தமாக உறிஞ்சு சாப்பிடுவார்கள். இது மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது.
இதே பிரேசிலுக்கு போனால் அங்குள்ள மக்கள் ஆண்/பெண் என பாகுபாடு இல்லாமல் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வார்கள். அதேபோல மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது அந்த நாட்டில் பொதுவான ஒரு பழக்கமாம்.
விசித்திரம்: அமெரிக்கர்களை பொறுத்தஅளவில் அவர்கள் எல்லாவற்றிலும் வித்தியாசமானவர்கள்.. சாப்பாட்டையே வேகவேகமாக சாப்பிடுவார்களாம்.. அதேபோல காலை முதல் மாலை வரை உள்ள காலத்தில் பெரும்பாலான நேரத்தை காஃபி குடிக்கவே செலவழிப்பார்களாம்..
இத்தாலியிலும் ஏறத்தாழ காஃபிக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாலும் கூட சாப்பிடும் போது ஒயின்+காஃபியை எடுத்துக்கொள்வார்கள். இந்த மக்கள் குடும்பத்தினர் மத்தியில் அதிக அளவில் பாசமாகவும் கவனிப்புடனும் இருப்பார்கள். அதேபோல பேசும்போதும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பேசுவார்கள்.
அன்பு - பாசம்: இதெல்லாம் விடுங்க.. என்னதான் இந்த பூமிப்பரப்பில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அன்பு என்று வந்துவிட்டாலும், அது எல்லாருக்குமே ஒன்றுதான்.. அந்த வெளீர் வானம் போல, எல்லோரும் வெள்ளை மனம் படைத்தவர்கள்தான். இது ஒன்றைதான், மனித இனத்தை இன்றுவரை, பலப்படுத்தியும், பண்படுத்தியும், பக்குவப்படுத்தியும் வருகிறது என்பதை மறுக்க முடியாதுதானே..!!!
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications