உடல் வேறு.. கால் வேறாக.. லிஃப்ட்டில் சிக்கி 2 துண்டான பிரபல ஸ்டார் ஹோட்டல் ஊழியர்.. சென்னையில் ஷாக்!
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் லிஃப்டில் சிக்கி ஹோட்டல் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ரூம் சர்வீஸ் பாயாக பணியாற்றி வரும் ஊழியர் அபிஷேக். இவர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இன்று அபிஷேக், அந்த ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் லிஃப்டில் செல்லும் போது, கதவு முழுவதும் மூடாமல் லிஃப்ட் கீழே இறங்கியுள்ளது.

இதனால், ஹோட்டல் ஊழியர் அபிஷேக் உடல் இரண்டாக துண்டிக்கப்பட்டு பலியானார். கதவு முழுமையாக மூடாமல் சென்ற நிலையில், ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளுக்கு இடையே சிக்கி தூய்மை பணியாளர் அபிஷேக்கின் உடல் துண்டானது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வீஸ் லிஃப்டில் இந்த விபத்து நடந்தது தெரியாமல் இருந்தது. நீண்ட நேரமாக சர்வீஸ் லிஃப்ட் கீழே வராத காரணத்தினால் சோதித்துப் பார்த்தபோது இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிர்ந்து போன ஹோட்டல் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. இதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் லிப்ஃடில் எவ்வாறு அபிஷேக் சிக்கி உயிரிழந்தார் என்பது குறித்தும், ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications