‛‛LGBTIQA+’’.. சென்னை மாநகராட்சி முழுஆதரவு.. ரிப்பன் மாளிகையில் ஒளிர்ந்த ‛வானவில்’ விளக்கு.. பின்னணி
சென்னை: ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்பட பல்வேறு பாலியல் உணர்வுகளை கொண்ட பிரிவான LGBTIQA+க்கு சென்னை மாநகராட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு LGBTIQA+ பிரைட் மாதத்தின் இறுதி நாளான இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ‛வானவில்' நிறத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்தது.
LGBTIQA+... சமீபகாலமாக நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளில் ஒன்று. இதன் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனி அர்த்தங்கள் உள்ளன. LGBTIQA+ என்பது தற்போது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண், பெண்கள் உள்ளிட்ட பாலினங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள அனைத்து பாலின ஈர்ப்பாளர்களையும் ஒருங்கிணைக்கும் சமூகமாக LGBTIQA+ செயல்பட்டு வருகிறது.

இதில் தன் பாலின ஈர்ப்பாளர்களான பெண்கள், ஆண்கள் உள்ளன. திருநங்கையர்கள், திருநம்பிகள், பல பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளனர். அதாவது பாலுனர்வில் ஒரு ஆண், இன்னொரு ஆணை விரும்புவது, ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புவது, ஒரே சமயத்தில் ஆண், பெண் என்று இருபாலினத்தவர்கள் மீதும் பாலுனர்வு ஏற்படுவது, யார் மீதும் பாலுனர்வு ஏற்படாதவர்கள் என பல்வேறு மனிதர்கள் இதில் அடங்குவார்கள்.
ஒரு காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமே இந்த சமுதாயத்தினர் தங்களை பெருமையாக LGBTQIA+ என்று கூறி வந்தனர். அதோடு தங்களின் உரிமைக்காக போராட தொடங்கினர். தற்போது நம் நாட்டிலும் LGBTQIA+ சமுகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் வலுக்க தொடங்கி உள்ளது. அதோடு LGBTQIA+ பிரிவினரின் ஊர்வலம், பேரணியிலும் பலரும் பங்கேற்க தொடங்கி உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் என்பது LGBTQIA+ பிரிவினர் பிரைட் மாதமாக கொண்டாடி வருகின்றனர். நாங்கள் எல்ஜிபிடிக்யூ + ஆக இருப்பதில் பெருமை அடைகிறோம் என்று இவர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த வேளையில் பல நகரங்களில் LGBTQIA+ பிரிவினர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்று வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் LGBTQIA+ பிரிவினர் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் தான் LGBTIQA+ சமுகத்தினருக்கு சென்னை மாநகராட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ரிப்பன் மாளிகையின் வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையிலான வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வானவில்லில் உள்ள நிறங்களில் ரிப்பன் மாளிகை ஒளிர்கிறது.
மேலும் இந்த பதிவில் சென்னை மாநகராட்சி, ‛‛ ஜுன் மாதத்தில் சர்வதேச ப்ரைட் மாதத்தை நிறைவு கூறவும், LGBTIQA+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் ரிப்பன் மாளிகை வானவில் வண்ணங்களில் ஒளிர்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications