ஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஜொலித்த மற்றொரு அழகு நட்சத்திரம் தமிழிசை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

    சென்னை: ஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஜொலித்த மற்றொரு நட்சத்திரமாக தமிழிசை உயர்ந்துள்ளார் என்பதற்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆளுநர் பதவியே சாட்சியாகும்.

    தமிழக அரசியலில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா என்ற பெண் சிங்கம் வந்தது. சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெண்கள் அவ்வளவாக தடம் பதிக்காத சமயத்தில் அதிமுகவில் இணைந்தார்.

    அதில் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டார். கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் ஜெயலலிதாவின் அழகான தமிழ் உச்சரிப்பை காணவும் அவரது பேச்சை கேட்கவும் ஏராளமான மக்கள் அவரது பொதுக் கூட்டத்தை காண்பதுண்டு.

    மாபெரும் இயக்கம்

    மாபெரும் இயக்கம்

    எம்ஜிஆர் மறைந்த போது வண்டியில் ஏற்றாமல் அவமானம், சட்டசபையில் அவமானம் என ஆணாதிக்க அரசியலில் பல்வேறு சங்கடங்களை சந்தித்தார் ஜெயலலிதா. பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது கட்சியின் முக்கியமானவர்களை தன் பக்கம் இழுத்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கட்டிக் காத்தார்.

    ஜெ.வுக்கு நிகர் அவரே

    ஜெ.வுக்கு நிகர் அவரே

    அதன்பின்னர் பெண் வேடமிட்ட சிங்கம் போல் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு சிரிக்க வைக்கும்படியான பதிலடியை அளிப்பதில் கருணாநிதி வல்லவர் என்றால் புள்ளி விவரங்களுடன் சரியான பதிலடி அளிப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரே.

    எதிர்க்கட்சித் தலைவர்

    எதிர்க்கட்சித் தலைவர்

    தனது வாழ்வில் அத்தனை அவமானங்கள், சங்கடங்கள், வேதனைகள் ஆகியவற்றை சுமந்த ஜெயலலிதா பின்னர் எம்பியாக ,எம்எல்ஏவாக, அமைச்சராக, முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக பல்வேறு முக்கிய பதவிகளை அலங்கரித்தார்.

    உயரங்கள்

    உயரங்கள்

    ஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவின் சாதனைகள் அளப்பரியது. அதன் பிறகு தமிழக அரசியலில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தமிழிசை சௌந்திரராஜன். மருத்துவராக இருந்து பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் படிப்படியாக பல்வேறு உயரங்களை தொட்டார்.

    தலைவர் பதவி

    தலைவர் பதவி

    கட்சியில் எத்தனை பேர் இருக்க இவரது துடிப்பான செயல்பாடும், திறமையும், உழைப்பையும் கண்ட பாஜக தலைமை இவருக்கு பாஜக மாநில தலைவர் என்ற பெரும் பதவியை அளித்தது. அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

    தக்க பதிலடி

    தக்க பதிலடி

    தலா 3 ஆண்டுகள் கொண்ட இந்த பதவிக்கு அவரே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கட்சி பேதமின்றி அண்ணன், தம்பி, சகோதரி, சகோதரன் என வாய் நிறைய அழைப்பார் தமிழிசை. அதே சமயம் அவரது அரசியல் அஸ்திவாரத்தையோ கட்சியையோ குறை கூறினால் அதற்கு தக்க பதிலடி கொடுத்துவிடுவார்.

    நீட்டிப்பு

    நீட்டிப்பு

    பேச்சாற்றல் கொண்ட தமிழிசை எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு லாவகமாக பதில் அளிப்பதில் வல்லவர். சில நேரங்களில் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதிலும் அவர் திறமைசாலி. தமிழக பாஜகவுக்குள்ளேயே இவருக்கு சிலர் ஒத்துழைப்பு நல்குவதில்லை என கூறப்பட்ட நிலையில் தனது விடாமுயற்சி, கடும் உழைப்பால் தமிழக பாஜக தலைவர் பதவியில் மீண்டும் நீட்டிக்கப்பட்டார்.

    நட்சத்திரம்

    நட்சத்திரம்

    தமிழகத்தில் பாஜக என்றாலே எதிரியை பார்ப்பது போன்ற மனநிலையை மாற்றி 43 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளார். எந்த தருணத்திலும் தனது கட்சியையும் தலைமையையும் விட்டுக் கொடுக்காத தமிழிசை தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னதான் அரசியலில் பெண்கள் இருந்தாலும் யாருடைய தயவுமின்றி சுயம்புவாக உருவான நட்சத்திரங்களில் தமிழிசையும் ஒருவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+