அட! சென்னையில் 4 தொகுதிகளில் திமுக வெல்ல வாய்ப்பு?.. கிரவுண்ட் ரிப்போர்ட் சொல்வது என்ன?
சென்னை: சென்னையில் திமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் அக்கட்சிக்கு எளிதான வெற்றி வாய்ப்பு இருப்பதாக கள நிலவரங்கள் சொல்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக 173 இடங்களிலும் அதிமுக 178 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் இரு கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன.

4 தொகுதிகள்
அந்த வகையில் சென்னையில் திமுக 16 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 4 தொகுதிகளில் திமுக எளிதில் வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கொளத்தூர், சேப்பாக்கம், எழும்பூர், திருவிக நகர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் தொகுதி
கொளத்தூர்- கொளத்தூர் ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ள தொகுதியாகும். இந்த தொகுதி 2008-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. கடந்த 2011, 2016-ஆம் ஆண்டு தேர்தல்களில் திமுக போட்டியிட்டு ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் மு.க.ஸ்டாலினும் அதிமுக சார்பில் ஆதி ராஜாராமும் அமமுக சார்பில் ஆறுமுகமும் நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

கருணாநிதி
சேப்பாக்கம்- சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி மூன்று முறை போட்டியிட்டு வென்றுள்ளார். 1977 முதல் இங்கு திமுக போட்டியிட்டு வென்று வருகிறது. கடந்த 2011, 2016ஆம் ஆண்டு ஜெ அன்பழகன் எம்எல்ஏவாக இருந்தார். அவர் கொரோனாவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தொகுதியில் ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுகிறார். தாத்தா போல் வென்று சேப்பாக்கம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்பாரா என்பது கேள்வியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.

திமுக
எழும்பூர்- எழும்பூர் தொகுதி தனி தொகுதியாகும். இது சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்டதாகும். இதுவும் திமுகவின் கோட்டை என அறியப்பட்ட தொகுதியாகும். இங்கு திமுக 7 முறை வென்றுள்ளது. எழும்பூர் தொகுதி திமுக சார்பில் பரந்தாமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு
அது போல் திருவிக நகரும் தனி தொகுதியாகும். இது சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்டதாகும். இந்தக தொகுதியில் தற்போது திமுக வசம் உள்ளது. இங்கு ஒரு முறை அதிமுக வென்றுள்ளது. எனவே இந்த 4 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகளே பிரதிபலிக்கும்.












Click it and Unblock the Notifications