சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவடியில் மாஃபா பாண்டியராஜன்.. மதுரவாயல் பெஞ்சமின்.. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம்பெற்றுள்ளது. கடந்த 5-ஆம் தேதி முதற்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

இதையடுத்து தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக வேட்பாளர்கள் பட்டியல் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீட்டிலும் தாமதம் ஏற்பட்டது.

தேமுதிக விலகல்

தேமுதிக விலகல்

இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. இதையடுத்து நேற்றைய தினம் இரவு பாஜக, பாமக ஆகிய கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து இன்றைய தினம் அதிமுக போட்டியிடும் 171 தொகுதிகளின் பட்டியல் வெளியானது.

அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டார்கள். அதிமுக மொத்தம் 177 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 3 அமைச்சர்களை தவிர்த்து மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பாலக்கோடு- கே பி அன்பழகன் போட்டியிடுகிறார்.

ராசிபுரம்

ராசிபுரம்

ஆரணியில் சேவூர் ராமச்சந்திரன், ராசிபுரத்தில் சரோஜா, குமாரபாளையத்தில் தங்கமணி, பவானியில் கருப்பண்ணன், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகிறார். தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணி, உடுமலைப்பேட்டையில் உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

திருச்சி (கிழக்கு)

திருச்சி (கிழக்கு)

அது போல் கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கர், திருச்சி (கிழக்கு)- வெல்லமண்டி நடராஜன், கடலூரில் எம்சி சம்பத், வேதாரண்யம்- ஓ எஸ் மணியன், நன்னிலம்- காமராஜ், விராலிமலை சி விஜயபாஸ்கர், மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ, திருமங்கலம்- ஆர் பி உதயகுமார், ராஜபாளையம்- ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சங்கரன்கோவில்- ராஜலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆவடியில் பாண்டியராஜன், மதுரவாயலில் பென்ஜமின், ஜோலார்பேட்டையில் கே சி வீரமணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிமுகவில் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.

English summary
List of Ministers in AIADMK Candidate List 2021: Except 3 AIADMK ministers, others are getting seats to contest again in Tamilnadu Assembly election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X