2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா முதல் மயில்சாமி வரை.. இத்தனை பிரபலங்கள் மாரடைப்பால் பலியானார்களா?
மாரடைப்பால் நடிகர் மயில்சாமி இறந்த நிலையில் இதுவரை அவ்வாறு இறந்த பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
சென்னை: நடிகர் மயில்சாமி இறந்த நிலையில் அவரை போல் மாரடைப்பால் இதுவரை இறந்த பிரபலங்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
நடிகர் மயில்சாமி தமிழ் திரையுலகில் காமெடியனாக குணச்சித்திர நடிகனாகவும் வலம் வந்தார். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், அவரை போன்ற மிமிக்ரி ஆர்டிஸ்ட் இனி பிறந்தால்தான் உண்டு என்கிறார்கள். மிமிக்ரி செய்து காசட் போட்டு தன்னை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறார். இது ஒரு புறமிருந்தாலும் அவர் கொடை வள்ளல் என்பதாலும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

95 சதவீதம்
அவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் 95 சதவீதத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவழிப்பதை தவறாமல் தனது இறுதி மூச்சு வரை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அண்மையில் கோட் சூட் போட்டு நடத்திய அட்டகாசமான போட்டோக்கள் வைரலாகின. அது ஏதேனும் படத்திற்காக எடுத்ததா என கேட்டதற்கு இல்லை சாதாரணமாக எடுத்தது என தெரிவித்தார்.

தீவிர சிவ பக்தர்
இந்த நிலையில் தீவிர சிவபக்தரான அவர் சிவராத்திரியின் போது கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலில் 3 கால பூஜைகளில் கலந்து கொண்டார். அப்போது டிரம்ஸ் சிவமணிக்கு அருகே உட்கார்ந்து கொண்டு அவரும் சிவனின் பாடல்களை பாடியிருந்தார். இதற்கு அடுத்து அதிகாலை கோயிலில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ராமசந்திரா மருத்துவமனை
இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறப்பிற்கு காரணமாக மருத்துவர்கள் சொல்வது, அவருக்கு ஏற்கெனவே இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை போன்ற நோயாளிகள் நிச்சயம் இரவு நேரங்களில் கண் விழிக்கக் கூடாது, 8 மணி நேரமாவது நல்ல உறக்கம் வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

கன்னட நடிகர்
இவரை போல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன், விவேக், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகர் கேக் ஆகியோர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தனர். இவர்களில் சீரஞ்சீவி சார்ஜா, கடந்த 2020 ஆம் ஆண்டு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சர்ஜா இறந்துவிட்டார்.

சேதுராமன்
அதே ஆண்டு தோல் மருத்துவரும் நடிகருமான சேதுராமன் சென்னையில் அவரது வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே ஆண்டு கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார். இவருக்கு திடீர் உடல்நல குறைபாடு ஏறபட்டதால் வீட்டிற்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார். இவ்வாறு பிரபலங்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications