Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறைந்த விலையில் தங்கம்.. லிஸ்டில் இந்த நாடும் இருக்கா! இந்தியாவில் விலை அதிகமாக இருக்க காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவை விட கம்மியாக தங்கம் விலை உள்ள சில நாடுகள் பற்றியும் அந்த நாடுகளை விட இந்தியாவில் தங்கம் விலை கூடுதலாக இருப்பது ஏன்? என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

தங்கம் என்றாலே தனி மதிப்புதான்.. குழந்தையை யாராவது கொஞ்சுவது என்றால்கூட என் தங்கம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது. அந்த அளவுக்கு தங்கத்தின் மீதான கவர்ச்சியும் மக்களிடையே உள்ளது. தங்கம் விலை எவ்வளவு கூடினாலும் அதை வாங்கும் ஆர்வம் மட்டும் மக்களிடையே குறையவில்லை.

Gold gold price Dubai

தங்கத்தின் விலை தற்போது 63 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கத்தின் விலையை பொறுத்தவரை சில நாடுகள், சில நகரங்களில் விலை குறைவாகவும், சில இடங்களில் கூடுதலாகவும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் எடுத்துக்கொண்டால் கூட மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அது ஏன் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராக இருக்கும் துபாய் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய நகராக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிற பகுதிகளை விட துபாயில் தங்கம் விலை குறைவு. அதுமட்டும் இன்றி அங்குள்ள தங்கம் மிகவும் தரமானது எனவும் வாங்குவதற்கு பாதுகாப்பானது எனவும் சொல்லப்படுகிறது. துபாயில் தங்கத்துக்கு விதிக்கப்படும் வரிகள் மற்ற நாடுகளைவிட குறைவுதான்.

குறிப்பாக தங்கத்தின் மீது மதிப்பு கூட்டப்பட்ட வரி இங்கு விதிக்கப்படுவதில்லை. அது மட்டும் இன்றி இறக்குமதி வரியும் குறைவாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால், துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை விட 10 முதல் 15 சதவீதம் குறைவாக உள்ளது. தங்கம் இதனால், வர்த்தகம் செய்பவர்களுக்கு மலிவான, லாபகரமான சந்தையாக விளங்குகிறது.

தாய்லாந்து

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் உள்ள பாங்காக், பட்டாயா போன்ற இடங்கள் தங்கம் வாங்குவதற்கு பிரபலமான இடமாக உள்ளது.. இங்கு தங்க உற்பத்திக்கு ஆகும் செலவு குறைவு ஆகும். அதுமட்டும் இன்றி தங்கம் மீது விதிக்கப்படும் வரியும் குறைவுதான். இத்தகைய காரணங்களால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது தாய்லாந்தில் தங்கம் விலை குறைவாக உள்ளது. தோராயமாக சொல்வது என்றால், இந்தியாவை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தங்கம் விலை குறைவாக தாய்லாந்தில் உள்ளது.

சிங்கப்பூர்

ஆசியாவில் உள்ள தீவு நாடு சிங்கப்பூர். மிகவும் குட்டி நாடான சிங்கப்பூரில் உயர் தரத்திலான தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மார்க்கெட்டுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை சேல்ஸ் செய்கின்றன. தங்கம் மீது குறைந்த வரியே விதிக்கப்படும். இதனால், நம் நாட்டை விட சிங்கப்பூரில் 5 முதல் 8 சதவீதம் குறைவாகவே உள்ளது.

மலேசியா

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று மலேசியா. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் நாடுகளில் ஒன்றாக இதுவும் உள்ளது. இங்கு உள்ள தங்க நகைக்கடைகள் போட்டி போட்டு குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்கின்றன. அது மட்டும் இன்றி இங்கு தங்கம் இறக்குமதி, உற்பத்தி கட்டணங்கள் குறைவாக உள்ளது. இதனால் இங்கு தங்கம் விலை இந்தியாவை விட குறைவாக உள்ளது. மலேசியாவில் தங்கம் விலை இந்தியாவை விட 5 % முதல் 10 % விலை மலிவாக உள்ளது.

ஹாங்காங்

ஹாங்காங்கில் தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க உலோகங்கள் மீது பெரிதாக வரி விதிக்கப்படுவது இல்லை. இதனால், மற்ற நாடுகளை காட்டிலும் இங்கு தங்கம் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவை விட 5 முதல் 10 சதவீதம் விலை குறைவாகவே தங்கம் கிடைக்கிறது. சொல்லப்போனால் இதை விட குறைவாகவும் போட்டி போட்டு தங்கம் விற்பனையும் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் ஏன்?

நம் நாட்டை பொறுத்தவரை இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, உற்பத்தி வரி உள்ளிட்ட காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. பொதுவாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் நாம் மேற்சொன்ன நாடுகளில் கூட தங்கம் விலை ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்.

ஆனாலும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. வெளிநாடுகளில் குறைவாக இருப்பதற்காக அங்கு போய் வாங்கலாமா? என சிலருக்கு மனதில் யோசனை எழும். ஆனாலும் வெளிநாடுகளில் தங்கம் வாங்கும்போது பயணச் செலவுகள், அங்கு விதிக்கப்படும் வரிகள், இறக்குமதி வரிகள் உள்ளிட்ட கூடுதல் செலவுகளையும் கவனிக்க வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டால் விலை இங்கிருப்பதை விட எகிற வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+