மாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்களே மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தது.

தேனி, வேலூர் தொகுதியை தவிர 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. அதில், அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கனியை சுவைத்தார். வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி, தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜாவை விட 4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் அதிகம் பெற்று அசத்தினார்.
அதே சமயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 3,219 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications