ஜனாதிபதி தொடங்கி கிளைச் செயலாளர் வரை.. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னவர்கள் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு;

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார்.

List of people who wished Stalin on his birthday

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை தலைவர் திஓம் பிர்லா ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் திரு. ஆர்.என். ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும், பூங்கொத்தினையும் அனுப்பி வைத்தார்.

தேசிய அளவில் தோழமைக் கட்சிகளின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாகவும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தொலைபேசி வாயிலாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

மாநில அளவில் தோழமைக் கட்சிகளின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, துரை வையாபுரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்; கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்; ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி இராமதாசு ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

திரைப்பட நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சமூகவலைதளம் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் முதலமைச்சரரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+