உலகில் ஊழல் குறைவான நாடுகள் லிஸ்ட்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா? முதலிடத்தில் சர்ப்ரைஸ்
சென்னை: உலக அளவில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியல் (Top 10 Least Corrupt Countries) வெளியாகியுள்ளன. 2024 கணகீட்டின் அடிப்படையில் வெளியான இந்த பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு இடம் பெற்றுள்ளது.. இந்தியா எத்தனையாவது இடம்.. கடைசி இடத்தில் எந்த நாடு என்ற விவரங்களை பார்க்கலாம்.
ஊழல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சொல்வது போல கடமையை மீறுவதற்கு இல்லை.. கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்கும் நிலைதான் பெரும்பாலான இடங்களில் காணமுடிகிறது.

ஊழல் இல்லாத நாடுகள்
ஊழலை ஒழிக்க எவ்வளவுதான் கடுமையான சட்ட திட்டங்கள் போட்டாலும் முற்றாக ஒழிக்க முடிவது இல்லை. இந்தியா மட்டும் இல்லை... உலகில் எல்லா நாடுகளிலும் ஊழல் நிலவுகிறது. உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா கூட இதற்கு தப்பவில்லை.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். சர்வதேச அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் எவை.. என்பது குறித்து கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஊழல் குறைந்து காணப்படும் டாப் 10 நாடுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
ஆஸ்திரேலியா
ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அரசியல் தலைவர்களை நேரடியாக கேள்வி கேட்கும் சுதந்திரம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதனால், அந்த நாட்டில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கிறது. வலுவான சட்டக்கட்டமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விதிமுறைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படுகிறது. இதனால், ஊழல் பற்றி மக்கள் நேரடியாக கேள்வி கேட்கிறார்கள்.
நெதர்லாந்து
இந்த பட்டியலில் 9-வது இடத்தை நெதர்லாந்து பிடித்துள்ளது. நெதர்லாந்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத்தின் காரணமாக, ஊடகங்களால் நெறிமுறையற்ற செயல்களை விசாரிக்க முடிகிறது. லஞ்சத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் டிஜிட்டல் அமைப்புகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அங்கு ஊழல் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
சுவீடன்
ஊழல் குறைவாக இருக்கும் நாடுகள் பட்டியலில் 8-வது இடத்தில் சுவீடன் உள்ளது. அந்த நாட்டில் அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளை அணுகுவது மிகவும் எளிது என்பதால், முறைகேடுகள் ரகசியமாக நடப்பது அரிதாலும் அரிதாகவே பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் மீது ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
7-வது இடத்தில் எந்த நாடு?
அடுத்ததாக இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள நாடு லக்சம்பர்க். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலமும், நேர்மையான வர்த்தக விதிகளை ஊக்குவிப்பதன் மூலமும் ஊழல் அங்கு குறைக்கப்பட்டுள்ளது. லக்சம்பர்க்கின் குறைவான மக்கள் தொகை, அதிகாரிகளுக்குக் கண்காணிப்பை எளிதாக்குகிறது. நிறுவனங்களும், அரசாங்க ஊழியர்களும் கடுமையான ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
நார்வே
இந்த லிஸ்டில் 6-வது இடம் வகிக்கும் நாடு நார்வே. இந்த நாட்டில் பெரும்பாலான பணிகள் டிஜிட்டல் சேவைகள் மூலம் கையாளப்படுகின்றன. இதனால், நேரடித் தொடர்பு குறைவாக உள்ளது. இது லஞ்சத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
மேலும் பொது மக்களின் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒரு உறுதியான ஜனநாயகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நார்வே ஊழலை எதிர்த்துப் போராடுகிறது. இங்குள்ள அரசாங்கம் பொதுப் பணத்தை வெளிப்படையாகச் செலவிடுகிறது. எனவே தங்களின் வரிப் பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதை மக்கள் எளிதாகக் காண முடிகிறது.
சுவிட்சர்லாந்து
பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து. இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போல இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த நாடு உலகில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இந்த நாட்டில் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகள் உள்ளன. வெளிப்படையான வங்கி பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
சுவிட்சர்லாந்து மக்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களை பொது வாக்கெடுப்புகள் மூலம் ஆதரித்தும், நிராகரித்தும் பழகியதால், அங்கு ஊழல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் பணப் பரிவர்த்தனைகள் மீதான கடுமையான கண்காணிப்பு, அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழலையும் குறைக்க உதவுகிறது. இந்த நாடு 5-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து:
அதேபோல, இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள நாடு நியூசிலாந்து. மக்கள் தொகை குறைவான நாடு என்பதால் இங்கு பெரும்பாலான பணிகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவே உள்ளது. நியூசிலாந்து அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்படுகிறது, வெளிப்படையான தொடர்பு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. வலுவான சட்டக் கட்டமைப்புகள் மூலம் லஞ்சம் தடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர்
ஊழலுக்கு எதிரான கடுமையான சட்ட திட்டங்களை கொண்ட நாடு சிங்கப்பூர். லஞ்சம் பெறுபவர்களுக்கான கடுமையான தண்டனைகள் இருப்பதால் சிங்கப்பூர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் அரசாங்கம், செல்வாக்கின் அடிப்படையில் அல்லாமல், திறமையின் அடிப்படையிலேயே ஊழியர்களைப் பணியமர்த்துகிறது.
இங்கு ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுவதும், லஞ்சம் வாங்குவது அல்லது தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
பின்லாந்து
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து இந்த லிஸ்டில் 2-வது இடத்தில் உள்ளது. அரசின் நேர்மையான செயல்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் காரணமாக, ஊழலற்ற தூய்மையான நாடுகளில் பின்லாந்து முன்னணி வகிக்கிறது. இங்கு ஊடகங்கள் சுதந்திரமாகப் பேச முடியும்.
அதேபோல, தவறுகளை அம்பலப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. பின்லாந்தின் மக்கள் நலத்திட்டக் கொள்கைகள், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பங்களிக்கின்றன. இது ஊழலுக்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது.
டென்மார்க்
ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நாடு டென்மார்க். இங்கு கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வலுவான பொது நம்பிக்கை காரணமாக, ஊழல் மிகவும் குறைந்த நாடாக உள்ளது. இந்த நாட்டில் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பு கூற கடமைப்பட்டவர்கள். மேலும் அரசியல் முடிவுகளைப் பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
இங்கு குடிமக்கள் அனைவரும் சேவைகளை சமமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதால், லஞ்சம், ஒருதலைபட்சம் என்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளது. மொத்தம் 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது. சோமாலியா, வெனிசூலா, சிரியா ஆகிய நாடுகள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.
டென்மார்க் கடந்த சில ஆண்டுகளால பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அனைவருக்கும் வியப்பை அளிப்பதாக உள்ளது. அந்த நாட்டில் இருக்கும் வெளிப்பட்த்தனையான நிர்வாகம் பொறுப்புக்கூறல் ஆகியவை முதலிடத்தில் நீடிக்க வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications