அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை எவை? அதிகாரப்பூர்வ விவரம்
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை எவை என்பது அதிகாரப்பூர்வமாக லிஸ்ட் வெளியாகியுள்ளன. செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு போன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக அதிமுக ஆகியவை தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக கூட்டணி
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக பாஜக தமாகா உள்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாமக விருப்பம்
வட மாவட்டங்களில் செல்வாக்கான கட்சியான பாமக தொகுதியில் போட்டியிடப் போகிறது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. அதேவேளையில் அதிமுகவுடன் தொகுதிகளை பங்கீடு செய்வதில் பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். வாக்கு வங்கி மற்றும் வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பாமக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வந்தார்கள்

நேற்று பேச்சு
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து நேற்று இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. நேற்று இரவு முழுவதும் பேச்சு வார்த்தை நடந்து முடிந்த நிலையில் அதிமுக, பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வ பட்டியல்
பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்:
- செஞ்சி
- மைலம்
- ஜெயங்கொண்டம்
- திருப்போரூர்
- வந்தவாசி(தனி)
- நெய்வேலி
- திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)
- ஆற்காடு
- கும்மிடிப்பூண்டி
- மயிலாடுதுறை
- பென்னகரம்
- தருமபுரி
- விருத்தாசலம்
- காஞ்சிபுரம்
- கீழ்பென்னாத்தூர்
- மேட்டூர்
- சேலம்(மேற்கு)
- சோளிங்கர்
- சங்கராபுரம்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
- பூந்தமல்லி(தனி)
- கீழ்வேலூர்(தனி)
- ஆத்தூர்(திண்டுக்கல் மாவட்டம்)
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications