Live updates: அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்.. பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு நாள் இன்று தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையிலும், அவரை போற்றும் வகையிலும் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம்.

முன்பு தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்ட இந்த நாள் தற்போது இந்திய அரசியலமைப்பு நாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடம் நவம்பர் 26ம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வாசித்து விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.

நாடாளுமன்றத்தின் மத்திய அறையில் பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார். அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மக்கள் முன் உரையாற்றி பின்னர் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதிகளை வாசிப்பார்.

Live updates of PM Modi speech at parliament on the 71st constitution day of India

Nov 26, 2021, 12:05 pm IST

71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று உரை
Nov 26, 2021, 12:02 pm IST

அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 12:01 pm IST

அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்களால் எப்படி தேசத்தை காக்க முடியும் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 12:00 pm IST

நாட்டிற்காக தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டவர்களை இங்கே நினைவு கூறுகிறேன் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:59 am IST

இன்று 26/11 மும்பை தாக்குதல் நடைபெற்ற நாள் என்பதையும் நாம் மறக்க கூடாது - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:55 am IST

தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த எல்லோரையும் நான் வணங்குகிறேன் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:46 am IST

கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருக்க கூடாது - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:46 am IST

ஒரு கட்சியை ஒரு குடும்பம் வழி நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:45 am IST

ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:41 am IST

வேற்றுமை கொண்ட இந்திய நாட்டை அரசியலமைப்பு சட்டம்தான் ஒருங்கிணைக்கிறது - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:41 am IST

மகாத்மா காந்தி மற்றும் நாட்டுக்காக போராடிய எல்லோரையும் இன்று நினைவு கூற வேண்டும் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:37 am IST

பல தலைவர்கள் தங்கள் சிந்தனையால் இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்கள் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:37 am IST

நாடாளுமன்ற அவைக்கு மரியாதை செலுத்தும் நாள் இது - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:37 am IST

அரசியலமைப்பு நாள் என்பது நமது நாட்டு தலைவர்களை நினைவு கூறும் நாள் - பிரதமர் மோடி
Nov 26, 2021, 11:37 am IST

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது
Nov 26, 2021, 11:36 am IST

இந்திய அரசியலமைப்பு புத்தகம் என்பது புதிய கீதை போன்றது - லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு
Nov 26, 2021, 11:32 am IST

எல்லோரும் சேர்ந்து நாட்டிற்காக உழைக்கும் எண்ணத்தை அரசியலமைப்பு புத்தகம் ஏற்படுத்துகிறது - ஓம் பிர்லா
Nov 26, 2021, 11:10 am IST

71வது இந்திய அரசியலமைப்பு நாள்: நாடாளுமன்ற நிகழ்வை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்
Nov 26, 2021, 11:10 am IST

14 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பிரதமர் உரையை புறக்கணிக்கின்றன
Nov 26, 2021, 11:09 am IST

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் புறக்கணிப்பு
Nov 26, 2021, 11:07 am IST

71வது இந்திய அரசியலமைப்பு நாள்: பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் உரை
Nov 26, 2021, 11:06 am IST

நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்த உள்ளார்
Nov 26, 2021, 9:29 am IST

71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று உரை
Nov 26, 2021, 9:29 am IST

இன்று நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்த உள்ளார்
Nov 26, 2021, 9:29 am IST

பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்து உரை நிகழ்த்துவார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+