Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்கிறீர்களா? புதிய சட்டத்தை பற்றி தெரியுமா? நடைமுறை சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டும், அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் தனி வீடு எல்லாம் லட்சத்தில் சம்பளம் வாங்குபவர்களால் கூட வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. ஏன் சென்னையின் முக்கிய பகுதிகளில் கூட அடுக்குமாடி வீடுகள் கோடியில் இருப்பதால் அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. அதேநேரம் ஓரளவு நடுத்தர பகுதிகள், சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை லட்சகங்களில் சம்பளம் வாங்குவோரால் வாங்க முடிகிறது.

Living in an apartment in Tamil Nadu Do you know about the new law

சென்னையில் இப்படி என்றால், கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கி குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொல்வது என்றால், நகர்புறங்களில் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் எல்லாம் எண்ணவே முடியாத அளவிற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்து விட்டது..

இதனால், தனி வீடுகளை போல்,, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசு அதற்கு என்று தனியாக சட்டமே இயற்றியது. முன்னதாக ரியல் எஸ்டேட் துறைக்காக 1994ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் இப்போதைக்கு ஒத்துப்போகவில்லை.. அதன் காரணமாக புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நிறைவேற்றியது. இதற்கு, 2023ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம். "புதிய சட்டம் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இயற்றப்பட்டதால், இந்தச் சட்டத்தின் கீழ் மட்டுமே சங்கங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். புதிய சட்டத்தின் கீழ், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குழப்பங்களைத் தவிர்க்க, திட்டத்தில் உள்ள பொதுவான பகுதிகள் மற்றும் வசதிகள் குறித்து ஒரு திட்டத்திற்கு ஒரே ஒரு 'விளம்புரை' மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.குறைந்தபட்சம் 4 குடியிருப்புகள் கொண்ட வீட்டு வளாகங்களுக்கு புதிய சட்டம் பொருந்தும். புதிய சட்டமானது' விளம்புரை' மற்றும் குடியிருப்பு உரிமையாளர்களின் நல அமைப்பினை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது, தவறும் பட்சத்தில், சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு மீது கட்டணத்தை உருவாக்க ஒரு குறிப்பிட்ட விதி சேர்க்கப்பட்டுள்ளது.

பல கட்டங்களாக உருவாக்கப்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து, ஒரு வளாகத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக, ஒரு கூட்டமைப்பு ஒன்றை அமைக்கும் வகையில் 'கூட்டமைப்பு' என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ சுற்றுச்சூழல் தற்போது இல்லாத நிலையில் பல பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்ய முடியாத நிலையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, திட்டத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு சொத்து உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறையாமல் இசைவு தெரிவித்தாலோ அல்லது கட்டடமானது அழிவுறு நிலையில், அல்லது குடியிருப்பாளர்கள் அல்லது நபர் எவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையிலுள்ளதாக குறிப்பிட்டு, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது சான்று அளித்தாலோ மறுசீரமைப்பு செய்ய புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

புதிய சட்டத்தின் கீழ், பிரிக்கப்படாத பாத்திதையின் சதவீதத்தைக் (UDS) கணக்கிடுவதற்கு ஒரு நிலையான மற்றும் குறிப்பிட்ட விதி வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது". மேற்கண்ட விதிகள் புதிய சட்டத்தில் முக்கியமானது ஆகும்.

புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் மார்ச், 6 முதல் அமலுக்கு வந்துள்ளதை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டம் இயற்றியதுடன் கடமை முடிந்துவிடாமல் சட்டத்தை முறையாகவும், சரியாகவும் கண்டிப்புடனும் அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏனெனில் இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தும் போது, அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் நடைமுறை விதிகள் வகுக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்துக்கு, இத்தகைய விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தை அமல்படுத்தினால் தான், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியோருக்கும், பழைய அடுக்குமாடி குடியிருப்பில் குடியோருப்போருக்கும் சட்ட ரீதியாக நிவாரணம் பெற முடியும் என்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+