"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக எல்கே சுதீஷ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அசையும் சொத்து, அசையா சொத்து, கடன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைந்துள்ளது. திமுக சார்பில் தேமுதிகவுக்கு இன்னும் சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

குறைந்தபட்சம் 6 முதல் 7 சட்டசபை தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
எல்கே சுதீஷ் போட்டி
மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த ராஜ்யசபா சீட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான எல்கே சுதீஷ் போட்டியிட்டுள்ளார். இவர் தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்தது. எல்கே சுதீஷ் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்த மனுத்தாக்கலின்போது எல்கே சுதீஷ் தனது சொத்து விவரங்களை இணைத்திருந்தார். அதன்படி எல்கே சுதீஷ்க்கு அசையும் சொத்தாக ரூ.11.03 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்தாக ரூ.28.16 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடனாக ரூ.4.72 கோடி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
யார் யார் போட்டி?
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். திமுக தனது 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும், இன்னொரு சீட்டை தேமுதிகவுக்கும் ஒதுக்கியது.
மீதமுள்ள இரு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் களமிறங்கி உள்ளார். இவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக – பாமக
அதிமுகவை எடுத்து கொண்டால் ஒரு இடத்தில் தம்பித்துரையும், இன்னொரு இடத்தை கூட்டணி கட்சியான பாமகவுக்கும், அதிமுக வழங்கியது. பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர் 6 பேரின் வேட்புமனுக்களும் இன்று ஏற்கப்பட்டது. இதன்மூலம் இவர்கள் 6 பேரும் ராஜ்யசபா எம்பியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications