சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்கேஜி படத்துல இப்படியெல்லாம் நடிச்சாரே.... மறக்க முடியுமா ரித்தீஷை?

Google Oneindia Tamil News

Recommended Video

    LKG-படத்தில் நடிப்பில் கலக்கிய ஜே.கே.ரித்தீஷ்

    சென்னை: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் 46 வயதில் மாரடைப்பால் காலமாகி இருப்பது திரை உலகினர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ்க்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அகால மரணம் அடைந்தார்.

    2007ம் ஆண்டு கானல் நீர் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ஜே.கே.ரிதீஷ். இவர் 2008ம் ஆண்டு நடித்த நாயகன் படம் மூலம் வெளிஉலகில் பிரபலம் ஆனார். அதன்பிறகு 2010ம் ஆண்டு பெண் சிங்கம் படத்தில் நடித்தார்.

    நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர் நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர்

    சூப்பர் நடிப்பு

    சூப்பர் நடிப்பு

    கடைசியாக 2019ம் ஆண்டு எல்கேஜி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜே கே ரித்தீஷின் நடிப்பை பார்த்து பலர் மிரண்டு போய் பாராட்டினார்கள். திமுவில் எம்பியாக இருந்த ஜேகே ரித்தீஷ் கடைசியாக அதிமுகவில் தான் இருந்தார். அப்படி இருந்தும், அதிமுகவை நேரடியாக விமர்சனம் செய்து எடுக்கப்பட்ட படத்தில் சூப்பராக நடித்து இருந்தார்.

    வெகுண்டெழும் ரித்தீஷ்

    வெகுண்டெழும் ரித்தீஷ்

    எல்கேஜி படத்தில் முதல்வர் இறந்த பின்னர், அடுத்த இடத்தில் இருக்கும் தலைவரால்(பிரபுவின் அண்ணன்) கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவார். இதனால் வெகுண்டெழுந்த ரித்தீஷ், லால்குடி இடைத்தேர்தலில் போட்டியிடுவார். இதில் வென்றால் கட்சி, ஆட்சி இவரது கைக்கு என்ற ரீதியில் இருக்கும்.

    பில்டப் காட்சி

    பில்டப் காட்சி

    கடைசியில் படத்தின் ஹீரோவான ஆர்ஜே பாலாஜியிடம், அவரது தேர்தல் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவார். இந்த படத்தில் ரித்தீஷ் வில்லான நடித்திருந்தாலும், ஒரு ரியல் அரசியல்வாதி போல் நடித்திருப்பார். உண்மையில் அவர் அரசியல்வாதியாக இருந்ததால் அப்படியே வெகுஎதார்த்தமாக இருந்தது. மாட்டை பாடி அடக்கும் காட்சி, சண்டை காட்சி, விழாக்களில் பங்கேற்று மக்களிடம் செல்வாக்கு பெறும் காட்சி என அவரை பற்றி எல்லா பில்டப் காட்சிகளுமே எதார்த்தமாகவே இருக்கும்.

    அரசியல்வாதி

    அரசியல்வாதி

    அரசியல்வாதியாக புகழ் பெற்ற ரித்தீஷ், நடிப்பில் அவ்வளவாக பிரபலம் ஆகாமல் இருந்தார். கடைசியில் தனது ரியல் வாழ்க்கையை ஒட்டிய அரசியல் படமான எல்கேஜியில் நடித்து புகழ் பெற்றார், இனனும் அவர் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது எதிர்பாராத மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    LKG actor J. K. Rithesh dies at ramanthapuram , he acted real politician character in lkg movie
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X