பெண்களுக்கு கடனுதவி திட்டம்.. வளைக்கப்படும் திமுக வாக்கு.. தமிழக அரசு மெகா பிளான்.. குஷியில் மகளிர்
சென்னை: 18 மாதங்கள்தான் பொதுத்தேர்தலுக்கு நேரம் உள்ளது.. எனவே, திமுக புதுபுது வியூகங்களை கையில் எடுக்க துவங்கியிருக்கிறது.. அந்தவகையில், இப்போது அதிரடி முடிவை திமுக எடுத்திருக்கிறது.. இதற்கு 3 விதமான காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்ற.ன
ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 4.73 லட்சம் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க திமுக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

கடனுதவி: ஏற்கனவே, இந்த 3 வருட ஆட்சியில், 90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டிருந்தாலும், மேலும் 90 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
துணை முதல்வர் உதயநிதியிடம் இதற்கான பொறுப்பு விடப்பட்டிருக்கிறதாம். அந்தவகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியும் வழங்க உள்ளார். இதற்கு 3 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
திமுக வெற்றி: வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற இப்போதே முனைப்பு காட்ட துவங்கியிருக்கிறது.. வழக்கமாக அதிமுகவுக்கு பெண்கள் ஓட்டு அதிகமாக இருக்கும். இதனை உடைத்து, திமுக பக்கம், மகளிர் ஓட்டுக்களை அதிகப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கி வருகிறது.
ஏற்கனவே, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாணவிகளு ரூ.1000 ஊக்கத்தொகை வரிசையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் சுழல் நிதி வழங்கவும் இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சுயஉதவி குழுக்கள்: இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. கடந்த 2009-ம் ஆண்டு துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது மகளிர் சுயஉதவிக்குழுக்கள் திட்டத்தைத்தான் கையில் எடுத்திருந்தார்.. மாவட்டம் வாரியாக, சுற்றுப்பயணம் சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி வந்தார்.. இது அப்போதைய திமுக அரசுக்கு மிகுந்த பலத்தை தந்ததுடன், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியையும் ஏற்படுத்தி தந்தது.
அதுபோலவே, இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், ஆயுத பூஜைக்கு பிறகு, உதயநித ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில் பயணத் திட்டம் வகுக்க்கப்பட்டு வருகிறது..
விஜய் புதுக்கட்சி: இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. விஜய் புதுக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் திமுகவின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவவதற்கும் இந்த கடனுதவி வியூகம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications