உங்க ஏரியாவில் உள்ள அடகு கடையில்.. நகை அடகு வச்சு இருக்கீங்களா? இனிமேதான் சிக்கலே.. போச்சு
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் வங்கிகள் அல்ல.. நகை அடகு கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
1. வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
3. தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
4. கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும்.
5. தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோ விற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.
நகை அடகு கடைகளுக்கு சிக்கல்
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் வங்கிகள் அல்ல.. நகை அடகு கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதாவது இவர்கள் நகைகளை பரிமாரிக்க முடியாமல் போகலாம். இனி நகைகளை அடகிற்கு எடுக்க முடியாமல் போகலாம். இன்னும் சில நகை அடகு கடைகள் இந்த விதிகள் காரணமாக மொத்தமாக மூடப்படும் நிலை கூட ஏற்படலாம்.
கடன்களில் செய்யப்படும் மாற்றங்கள்
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு வந்த நிலையில் வேறு ஒரு விஷயமும் மக்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications