Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100% ரிசல்ட் வேணும்.. இல்லைனா! தேர்தலுக்கு பின் ஸ்டாலின் எடுக்கும் "ஆக்சன்".. பரபரக்கும் அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழ்நாடு அமைச்சரவையில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிய இருக்கிறது. இதையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

ஆளும் தரப்பை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் மொத்தமாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உத்தரவு

உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணிகளை செய்யும்படி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டு இருந்தார். ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதோடு அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் தொகுதிகளில் கண்டிப்பாக 100 சதவிகித வெற்றியை பெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்ததாக தகவல்கள் வந்தன.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்கத்தில் திமுக கொஞ்சம் சுணக்கம் காட்டியது. தேர்தலில் திமுக கண்டிப்பாக வென்றுவிடும் என்று உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் காரணமாக அமைச்சர்கள் பலர் பிரச்சாரத்திற்கு செல்லாமல் சுணக்கம் காட்டி உள்ளனர். எம்எல்ஏக்கள் பலரும் களத்திற்கு செல்லாமல் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பணிகளை தீவிரமாக செய்யுங்கள் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது.

ஓவர்டேக்

ஓவர்டேக்

அதிமுக, பாஜக சில இடங்களில் நம்மை ஓவர்டேக் செய்ய தொடங்கி உள்ளது. ஆளும் கட்சியாக இருந்து கொண்டு தேர்தலில் தோல்வி அடைந்தால் சரியாக இருக்காது. அதனால் களத்தில் இறங்கி வேலை பாருங்கள். வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே கடந்த 4-5 நாட்களாக திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதுவரை தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருந்த அமைச்சர்களும் கூட களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை செய்து வந்தனர்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் தேர்தலுக்கு பின்பாக அமைச்சர்களின் பணிகளையும், தேர்தல் ரிசல்டையும் வைத்து அமைச்சரவையில் சில சிறிய மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது தேர்தலில் சரியாக பணிகளை செய்ய, துறை ரீதியாக பெரிய அதிரடியை நிகழ்த்தாத, 100% ரிசல்ட் தராத அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பிடிஆர், செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்ற முக்கிய பொறுப்புகளை கவனிக்கும் அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

யார் எல்லாம் மாற்றம்?

யார் எல்லாம் மாற்றம்?

ஆனால் சில சிறிய துறைகளுக்கான அமைச்சர்கள், மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்காத அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு ஐடி செயலாளர் என்று பெரிய பொறுப்பும், அதில் பல டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு இருப்பதால் அமைச்சரவை பதவி கொடுக்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

புதிய அமைச்சரவை?

புதிய அமைச்சரவை?

மற்றபடி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பும், அமைச்சர் ஐ பெரியசாமிக்கு வேறு பெரிய அமைச்சரவையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அமைச்சரவை குறித்து விமர்சனம் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சரவையில் அதிகமான நபர்கள் முன்னாள் அதிமுக நிர்வாகிகள். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை நம்பித்தான் திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

Recommended Video

    #TNLocalBodyElection திருச்சி: வாக்குறுதியை நிறைவேற்றிய ஸ்டாலின்... உள்ளாட்சித் தேர்தலே சாட்சி என அமைச்சர் விளக்கம்!
    2- 3 மாதம்

    2- 3 மாதம்

    திமுகவில் அமைச்சருக்கும் தகுதி கொண்டவர்கள் யாரும் இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார். திமுகவை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளும் இதே வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை சரி செய்யும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பெரிய அமைச்சர்கள் எல்லாம் நீக்கப்பட மாட்டார்கள். பட்ஜெட் முடிந்த பின்பே புதிய அமைச்சரவை பற்றி யோசிப்பார்கள். இன்னும் 2-3 மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+