கொடுப்பதை வாங்கிக்கோங்க.. ட்விஸ்ட் தந்த டெல்லி பாஜக மேலிடம்? 5% தான் தருவோம்.. கறாராக சொன்ன அதிமுக?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நேற்று நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் எட்டப்படவில்லை.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல்நாள் தொடங்கியது. ஆனால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் இரண்டு நாட்களாக வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. பிரதான கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை. அதேபோல் வேட்பாளர்களையும் தேர்வு செய்யவில்லை.

அதிமுக பாஜக
இந்த நிலையில்தான் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கடந்த மாதம் இந்த பேச்சுவார்த்தை நடந்து இருந்தால் கண்டிப்பாக கூட்டணியில் சுமுகமான உடன்படிக்கை எட்டப்பட்டு இருக்கும். ஆனால் சமீபத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சென்னை போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மை இல்லை என்று பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால் அதிமுக தலைகள் கடும் கொதிப்பில் உள்ளனர்.

நயினார் நாகேந்திரன்
இதன் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே.. பொது நிகழ்ச்சி ஒன்றில் எங்களை எப்படி இழிவாக பேசலாம்.. நாங்கள் சில விஷயங்களை பொறுத்து போகிறோம் என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என்று அதிமுக தலைகள் சிலர் பாஜகவினர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்தும் அதை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக கோபம்
இந்த நிலையில்தான் நேற்று நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இந்த மோதல் எதிரொலித்தது. பாஜகவிற்கு வேண்டுமென்றே குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக முன் வந்தது. பாஜக இதை உணர்ந்துதான் கூட்டத்திற்கும் வந்தது. கூட்டணியில் லேசான கசப்பு நிலவுகிறது. கண்டிப்பாக அதிமுக அதிக இடங்களை நமக்கு ஒதுக்காது என்ற நினைப்போடுதான் பாஜக கூட்டணி ஆலோசனைக்கே வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 4 மணி நேரம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மேயர் இடங்கள்
பாஜக சார்பில் அதிமுக கூட்டணியில் இருந்து 5 மேயர் பதவிகள் கேட்கப்பட்டு உள்ளன. பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகளில் மேயர் பதவிகள் கேட்கப்பட்டு உள்ளன. அதேபோல் 30 சதவிகித கவுன்சிலர் இடங்களை கொடுக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிமுக தரப்போ அதிகபட்சம் 1 மேயர் பதவியை கொடுப்போம். அதுவும் நாங்கள் தரும் மாநகராட்சிதான். அதேபோல் 5 சதவிகித கவுன்சிலர் இடங்களை மட்டுமே கொடுப்போம் என்று அதிமுக கூறியுள்ளது.

அதிமுக கவுன்சிலர்
இதில் பாஜக சில இடங்கள் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 3 மேயர் இடங்கள், 15 சதவிகித கவுன்சிலர் சீட்கள் என்று பாஜக இறங்கி வந்துள்ளது. அதே சமயம் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மேயர் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது. ஆனால் இது எதற்கும் அதிமுக தரப்பு இசைந்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 5 சதவிகித இடங்கள் மட்டுமே கொடுப்போம் என்று அதிமுக உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

அறிவுரை என்ன?
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவிற்கு டெல்லி மேலிடம் இதில் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறதாம். அதன்படி முடிந்த அளவு இடங்களை பெறுங்கள். இல்லையென்றால் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். நமக்கு 2024 லோக்சபா தேர்தல்தான் முக்கியம். அதுவரை பொறுத்து இருப்போம். கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு தலைமைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். இதனால் இன்று அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications