யார் அந்த "கருப்பு ஆடு".. பேக் டோர் வழியாக கொஞ்சிக் குலாவும் "எம்.பி".. திகிலில் திமுக!
திமுகவில் உள்ள அந்த கருப்பு ஆடு யார் என்று தெரியவில்லை
சென்னை: பாஜகவுக்கு ஒரு திமுக எம்பி நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை.
எப்படியாவது, தமிழகத்தில் காலூன்ற பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகிறது பாஜக.. என்னென்னவோ செய்து பார்த்தும் இதுவரை ஒன்றும் வேலைக்காகவில்லை என்றாலும் தன் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை.

பிரதான கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுப்பது, பிரபலமானவர்களையும், விஐபிக்களையும் அழைத்து வந்து கட்சியில் முக்கியமான சீட் தருவது, அதிமுகவுக்கு நெருக்கடியும், குழப்பத்தையும் தந்து கொண்டிருப்பது, டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, திமுகவை இந்த முறை தோற்கடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை தினம் தினம் வளர்த்து வருவது, அத்துடன் இந்துக்களின் வாக்குகளை அப்படியே அள்ளி கொள்ள ஏதாவது ஒரு அதிரடியை கையில் எடுப்பது என டாப் கியர் போட்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு தகவலும் கசிந்து வருகிறது.. இப்பாதைக்கு திமுக தான் முக்கிய குறி என்பதால், ஸ்டாலின் குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பாஜக தலைமைக்கு, திமுக எம்பி ஒருவர் ரகசியமாக தகவல் சொல்லி வருகிறாராம்.. இதற்கு காரணம், அந்த எம்பி பல விஷயங்களில் சிக்கலில் உள்ளவராம்.. ஏற்கனவே இவர் மீது ரெய்டு நடப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது..
இதனால் அனைத்து விஷயங்களில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படி செய்து வருகிறாராம்.. அதைவிட முக்கியம், இப்போதிருக்கும் பதவியைவிட, பல விவகாரங்களில் இருந்து அவர் வெளியே வந்தால் போதும் என்ற மனநிலையிலும் இருக்கிறாராம்
அவர் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. இந்த தகவல் உண்மைதானா என்றும் தெரியவில்லை.. தேர்தல் நெருங்குதால் இப்படிப்பட்ட செய்திகளை சிலர் கசிய விட்டு வருகின்றனரா? அல்லது உண்மையிலேயே அப்படி நடந்து வருகிறதா என்றும் தெரியவில்லை... ஆனால், களம் படுசூடாகி கொண்டிருக்கிறது!
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications