சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்சாச்சு இங்கேயும்.. இது வேற லெவல் பிரச்சனை.. யாருக்கு "அந்த" பதவி காத்திருக்கிறதோ..!

தேமுதிகவில் வாரிசு பிரச்சனை தலைதூக்கி வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவுக்குள் மட்டும்தான் இந்த பிரச்சனை தலைதூக்காமல் இருந்தது.. கடைசியில் இங்கும் வந்துவிட்டது..!

தேமுதிகவுக்கு இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. சென்ற முறை சட்டசபை தேர்தலை விட இந்த முறை அளவுக்கு அதிகமாகவே பிடிவாதம் காட்டி வருகிறது.. 41 சீட் என்பதிலேயே இப்போது வரை உறுதியாக இருக்கிறார்கள்.

இன்று 2021ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி.. பிரதமர் மோடி என்ன பேச போகிறார்.. பரபரப்பு! இன்று 2021ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி.. பிரதமர் மோடி என்ன பேச போகிறார்.. பரபரப்பு!

தங்களுக்கு அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.. இது சம்பந்தமாக நாளை அறிவிக்கவும் உள்ளதாக தெரிகிறது.

தேமுதிக

தேமுதிக

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தேமுதிகவில் இதுவரை அவ்வளவாக கோஷ்டி பூசல் வந்ததில்லை.. அன்று கலைஞர், அதிருப்தி காரணமாக தேமுதிக சிதறியது.. முக்கியமான 4 எம்எல்ஏக்கள் திமுகவிலும் வந்து இணைந்தனர்.. அதேசமயம், தங்களை நம்பி வந்தவர்களுக்கு முக்கிய பெறுப்பு, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி கருணாநிதியும் கவுரப்படுத்தினார் என்பதை மறக்க முடியாது.

விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

அதோடு சரி, முக்கிய தூண்களே சரிந்துவிட்ட பிறகு தேமுதிகவில் பலம் பொருந்தியவர்கள் யாரும் இல்லை.. இப்போதுகூட அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் யார் யார் என்று பலருக்கும் தெரியாது.. நமக்கு தெரிந்ததெல்லாம் பிரேமலதா, சுதீஷ், கொஞ்சம் காலமாக விஜய பிரபாகரன்.. அவ்வளவுதான்..!

பிரேமலதா

பிரேமலதா

இதில் பிரேமலதா அளவுக்கு காரசாரமான பேச்சு, பேட்டி, பிரச்சாரங்கள் சுதீஷிடம் எடுபட்டதில்லை.. விஜய பிரபாகரன் வாயை திறந்தாலே, வார்த்தைகள் வெடித்து வந்து விழுகின்றன. இப்போது தகவல் என்னவென்றால், இருக்கிற இந்த 2 பேர் இடையே வாரிசு யுத்தம் ஆரம்பமாகி இருக்கிறதாம்..

போட்டி

போட்டி

அதாவது அதிமுகவிடமிருந்து பெறும் ராஜ்ய சபா சீட்டை சுதீஷுக்கு கொடுக்க கூடாது என்று விஜய பிரபாகரன் பிரேமலதாவிடம் வலியுறுத்துவதாக தெரிகிறது... அதேபோல, விஜயகாந்த், பிரேமலதா ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்த கட்ட தலைமை யார் என்பதில் தான் சுதீஷுக்கும், விஜய பிரபாகரனுக்கும் போட்டா போட்டி நடந்து வருகிறதாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. முதலில் கூட்டணி முடிவானால் சரி..!

English summary
Local Politics in Vijayakanths DMDK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X