ஓஹோ, அப்படி.. பாஜக சுத்தியல்னா.. திமுக சாவி.. உதயநிதி ஸ்டாலின் ஒரே போடு!
சென்னை: இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது அவர் பூட்டு சுத்தியல் சாவியை வைத்து குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.
அரசியல் கட்சித்தலைவர்கள் மேடையில் பேசும் போது சுவாரஸ்யத்திற்காக குட்டிக்கதை ஒன்றை கூறுவார்கள். ஜெயலலிதா கூறும் குட்டிக்கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். பெரும்பாலும் திமுகவை தாக்குவதாகவே இருக்கும். சினிமாவில் நடிகர் விஜய் கூறும் குட்டிக்கதைகள் ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரையும் கவரும்.

இப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் அவ்வப்போது குட்டி ஸ்டோரி கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி பலரையும் கவர்ந்தது.
பூட்டு ஒன்றை திறப்பதற்காக அதன் தலையின் மீது மிகப்பெரிய சுத்தி ஒன்றினை கொண்டு மத்திய அரசு ஓங்கி அடிக்கிறார்கள். ஆனால் அதை திறக்க முடியவில்லை. சிறிய சாவி அதை திறந்துவிட்டது. அப்போது நீ மட்டும் எப்படி பூட்டை திறந்தாய் என சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி பதிலளித்தபோது, நான் பூட்டின் இதயத்தை தொட்டேன். ஆனால் நீ தலையின் மீது அடித்தாய் என்று சொன்னது.

இதன்மூலம் கூறுவது என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களின் தலையில் மத்திய அரசு ஓங்கி அடித்தாலும், அது பலனளிக்காது. ஆனால் தமிழக மக்கள் சாவியை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள். எனவே அவரால் மட்டுமே மக்களின் மனதை தொடமுடியும் என்று சொன்னார்.
திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் இளைஞர் அணியினர் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications