லாக்டவுன், இ பாஸ் முடிவுக்கு வருமா? - இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்
ஏழாம் கட்ட லாக்டவுன் 31ஆம் தேதி உடன் முடிய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்
சென்னை: தமிழகத்தில் லாக்டவுனை மேலும் நீடிக்கலாமா? இ பாஸ் முறையை ரத்து செய்யலாமா? என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இன்றைய தினம் முதல்வர் பழனிச்சாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2.75 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. 1.72 கோடி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்றாலும் தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் 34 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 26 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏழாம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏழாம் கட்ட லாக்டவுன் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் பிற்பகலில் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது பற்றியும் லாக்டவுன் தளர்வுகள் பற்றியும் இ பாஸ் ரத்து செய்வது பற்றியும் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications