ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் கலங்கி கிடக்கு.. நிர்மலா வேறு குழப்பி விட்டுள்ளார்.. கஸ்தூரி தாக்கு
நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: எதுவுமே பிளான் பண்ணனும்.. பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே.. அது மாதிரி நிதியமைச்சரின் ஒரு அறிவிப்பு குறித்து கஸ்தூரி விமர்சித்துள்ளார்.. இது சம்பந்தமான ட்வீட் பதிவிட்டுள்ளதால், அது பெரும் சர்ச்சையையும் கிளப்பி வருகிறது.
Recommended Video
கொரோனாவைரஸால் நாட்டின் பொருளாதாரமே முடக்கம் கண்டுள்ளது... நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அமலிலும் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இதனால் மத்திய அரசு எப்படியும் மக்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யோஜனா திட்டம்
அதன்படியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதில் ஒன்றுதான் இலவசமாக கேஸ் சிலிண்டர் அறிவிப்பு.. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதை மத்திய அரசு தனது பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கும் என்றும் இத்திட்டத்தின் கீழ் 8.3 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அறிவிப்புகள்
இந்த அறிவிப்புக்குதான் கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.. "திட்டமிடப்படாத அறிவிப்புகளுக்கு இது ஒரு உதாரணம்... இலவசமோ இல்லையோ எல்லா குடும்பத்திற்கும் மாசம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு செய்திருக்கலாம்... ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர்களை புக் செய்தால் அதை உரிய நேரத்தில் வழங்காமல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்
உஜ்வாலா பயனாளர்களுக்குதான் இலவச கேஸ் சிலிண்டர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதனால் அந்த திட்டத்தில் இல்லாமல் உள்ள சாதாரண பயனாளர்களுக்கு கேஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதே கஸ்தூரி வெளிப்படுத்தின கருத்தாக இருக்கலாம் என தெரிகிறது.. அதனால் இது சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் கஸ்தூரியின் இந்த கருத்துக்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.

3 சிலிண்டர்
இதில் ஒருவர், "இல்லை, உஜ்வாலா பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு 3 சிலிண்டர் இலவசம் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே இது மாதத்திற்கு ஒரு சிலிண்டர் வரம்பற்றது அல்ல. உங்கள் ட்வீட்டை சரிபார்த்து சரி செய்யுங்கள்"என்று கஸ்தூரிக்கு கமெண்ட் போட்டுள்ளார்.. மேலும் பலர் "ஆமாம்.. உண்மைதான் என்றும், "டெலிவரி சார்ஜ்-ன்னு சொல்லிட்டு 50 ரூபாய் எக்ஸ்க்ட்ரா வாங்கிக்கிறாங்க அக்கா".. என்றும் பதிவுகளை ட்விட்டர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications