"ம்ஹூம்.. மோடி அங்கிள் சொல்லி இருக்காரு" அழுதபடியே சொன்ன சிறுவன்.. வைரலாகும் க்யூட் வீடியோ
மோடி அங்கிள் சொல்லி இருக்காரு என்ற சிறுவனின் வீடியோ வைரலாகிறது
சென்னை: "ம்ஹூம்.. மோடி அங்கிள் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்று சொல்லியிருக்கிறார்" என்று க்யூட்டாக சொல்லும் சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது.. இந்த உத்தரவு மேலும் நீட்டிக்கும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எல்லாருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது... அதில் ஒரு பெண் தன் குழந்தையிடம், "ஓகே, நாம இப்போ வெளியே போலாமா? ரெடியா? என கேட்கிறார்.. அதற்கு அந்த சிறுவன், "இல்லை.. நான் ரெடி இல்லை'என்கிறான்.

வீடியோ
"ஏன் ரெடி இல்லை.. இப்பதானே நீ தயார் என்று சொன்னாய்.. வா வெளியே போகலாம்" என்று அம்மா கேட்கவும், "இது ஊரடங்கு.. மோடி அங்கிள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்" என அழுதுகொண்டே பதிலளிக்கிறான்.

வாழ்த்து
மீண்டும் சிறுவனின் அம்மா, "பரவாயில்ல, வெளியே போய்ட்டு வரலாம்" என்று சொல்ல, அதற்கு, "இல்லை.. அரசாங்கம் என்னை எடுத்துக் கொள்ளும். மோடி அங்கிள் என்னை வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்" என கியூட்டாக சொல்கிறான். ஏராளமான பிரபலங்கள் சிறுவனின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளம் நண்பனே
இந்த வீடியோவை பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பதிவு செய்துள்ளதுடன், பிரதமர் மோடியையும் அதில் டேக் செய்திருக்கிறார். மேலும், "என் நண்பர் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். கண்டிப்பாக எல்லோரும் பகிர வேண்டிய ஒன்று. இந்தச் சிறுவன் ஊரடங்கை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுகிறான். ஏனென்றால் மோடி அங்கிள் சொன்னார் என்று. இவனது அழகையும், அர்ப்பணிப்பையும் கண்டிப்பாக ரசிப்பீர்கள். நன்றி என் இளம் நண்பனே" என்று பதிவிட்டுள்ளார்.
|
வைரல் வீடியோ
இந்த ஊரடங்கு குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் இந்த வீடியோ விழிப்புணர்வு இல்லை.. திட்டமிட்டு பேசப்பட்டதும் இல்லை.. இயல்பாகவே, யதார்த்தமாக குழந்தை அழுது கொண்டே பேசுவதுதான் ஹைலைட்டே.. ஊரடங்கு பிறப்பித்தும் சொல் பேச்சு கேட்காமல் தேவையில்லாமல் ரோட்டில் திரிந்து கொண்டிருக்கும் சிலரின் கண்ணுக்கு இந்த வீடியோ தென்பட்டால் நல்லா இருக்கும்!!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications