அதிகாலையில்.. யாருமே இல்லை.. கேமரா இருப்பது கூட தெரியாமல்.. நைஸாக.. அடக் கொடுமையே!

பால் பாக்கெட் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிரித்தபடியே ஒரு திருட்டு அசால்ட்டாக நடந்துள்ளது.. விடிகாலை நேரத்தில் பால் பாக்கெட்டை திருடி, திருடி மர்மநபர்களிடம் எடுத்து தருகிறான் ஒரு சிறுவன்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி சென்னை மக்களை அதிர வைத்துள்ளது.

தற்போது 4-வது லாக்டவுன் அமலில் உள்ளது.. எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.. எனினும் பல பகுதிகளில் சென்னையில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன

 lockdown: milk theft near chennai caught on cctv footage

இந்த வீடுகளில் இப்போதைதக்கு ஆட்கள் இல்லை.. ஊரடங்கு காரணமாக எல்லோரும் சொந்த ஊருக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். அதனால் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டுக்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக தாம்பரம், பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகளில் நிறைய திருட்டுக்கள் நடந்து வருகின்றன. இதனால் போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். அந்த கேமராவில் சிக்கியவர்களையும் விசாரித்து கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், பொருட்களையும் தாண்டி பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் பகுதியில் இன்று விடிகாலை பால் பாக்கெட்டுகளை லோடு இறக்கி வைத்திருந்தனர்.. இங்கிருந்து அந்த ஏரியா முழுவதும் விநியோகிக்க தயார் நிலையில் அந்த பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது பால் பாக்கெட் வைத்துள்ள ஒவ்வொரு பெட்டியையும் அலேக்காக தூக்கி செல்லப்படுகின்றன.. இது அங்கிருக்கும் கேமிராவிலும் பதிவாகி உள்ளது.. ஆனால் கொடுமை என்னவென்றால், மர்மநபர்கள் தாங்களே நேரடியாக வந்து திருடாமல், ஒரு சிறுவனை அனுப்பி பால் பெட்டியை திருடி வர சொல்கிறார்கள்.

அந்த சிறுவனோ சிசிடிவி இருப்பது தெரியாமல் சிரித்துகொண்டே வந்து ஒவ்வொரு பால் பெட்டியையும் திருடி கொண்டு போய் மறைந்திருக்கும் மர்மநபர்களிடம் தந்துவிட்டு வருகிறான்.. இது சம்பந்தமாக தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டுள்ளது... விடிகாலை நேரத்தில் பால் பாக்கெட்டை திருடிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+