கண்ணாடியை திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும்? செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டில் “லாஜிக்” இடிக்குதே
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இது மிகப்பெரிய லாஜிக் மிஸ் ஆகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். என்ன அது?
தமிழ்நாடு மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் இருக்கும் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
அதேபோல் தலைமை செயலகத்தில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சருக்கான செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைமை செயலகத்திலேயே நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் இது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்ற விமர்சனங்களும் எழுந்து உள்ளன.
தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை பதிவு செய்தது. எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகின்றன. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில் கடந்த மே மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தனர்..

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில்தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறைக்கான அலுவலகத்தில்தான் அப்போதைய கோப்புகள் வைக்கப்பட்டு இருக்கும்.
அப்படி இருக்கையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சுமத்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழல் புகார் தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏன்? போக்குவரத்துத் துறை கோப்புகள் மின்சாரத் துறை அமைச்சருக்கான அலுவலகத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
-
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications