Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கிளீன் ஸ்வீப்! தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை தேர்தல் நடந்தால் என்ன ஆகும்? அதிமுகவுக்கு எத்தனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கும் சட்டசபை தொகுதியில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

m k stalin lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politic

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை வாரியாக விவரம்: 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.

8 இடங்களில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது. 3 தொகுதிகளில் பாமக முதலிடம் பிடித்துள்ளது. 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக/தாமரை போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை. அதிமுக 8 தொகுதிகளில் அதாவது எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.

பாமக 3 தொகுதிகளில் பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது. தேமுதிக 2 தொகுதிகளில் திருமங்கலம், அருப்புக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் இல்லை. அதிமுக 8 தேமுதிக 2 பாமக 3 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.

பாஜக சரிவு; இந்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக கிளீன் ஸ்வீப் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக படுதோல்வி அடையும் என்றும் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மோசமாக செயல்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக 1 இடத்தை கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவே அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார். ஆனால் அந்த யாத்திரையும் பலன் அளிக்கவில்லை.

பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனின் வேல் யாத்திரைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏ இடங்களை வென்றது. அதேபோல் தமிழிசை தலைவராக இருந்த போது 2 இடங்களை பாஜக வென்றது.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு கீழ்.. அவர் எண் மண் எண் மக்கள் யாத்திரை சென்றும் கூட ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை. அவரின் அரசியல் டிராக் ரெக்கார்ட் இதுவரை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த எண் மண் எண் மக்கள் யாத்திரை வாக்கு சதவிகிதம் ரீதியாகவும், இடங்கள் ரீதியாகவும் சரி அவருக்கும் கட்சிக்கும் பலன் கொடுக்கவே இல்லை, என்று ரிப்போர்டுகள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+