சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. இன்றில் இருந்து விருப்பமனு தாக்கல்.. வேகம் எடுக்கும் திமுக!

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் இன்றில் இருந்து வேட்பாளர் விருப்ப மனுக்களை பெற்று செல்லலாம் என்று திமுக கட்சி தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் இன்றில் இருந்து வேட்பாளர் விருப்ப மனுக்களை பெற்று செல்லலாம் என்று திமுக கட்சி தெரிவித்து இருக்கிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உருவாகி உள்ளது. திமுக இன்னும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Lok Sabha Election 2019: DMK starts giving application for its candidate selection

இந்த நிலையில் திமுக பெரும்பாலும் 21 லோக்சபா தொகுதிகள் வர போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கான விருப்ப மனுக்கள் தற்போது பெறப்படுகிறது.

அதன்படி இன்றில் இருந்து விருப்ப மனுக்கள் அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை மார்ச் 7ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 1000 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது 25,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் மார்ச் 1ம் தேதில் இருந்து 7ம் தேதி வரும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு விண்ணப்பங்களும் அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் திமுக தீவிரமாக தயாராகி வருவது உறுதியாகிறது.

English summary
Lok Sabha Election 2019: DMK Chief M K Stalin, starts giving application for its candidate selection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X