சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்திலும் பிரச்சனை.. ஈவிஎம்களில் கோளாறு.. என்ன நடக்கிறது?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.

    இன்று லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள்.

    கடமை தவறாத க.அன்பழகன்.. மூக்கில் டியூப்.. சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த தருணம் கடமை தவறாத க.அன்பழகன்.. மூக்கில் டியூப்.. சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த தருணம்

    ஆந்திரா தேர்தல்

    ஆந்திரா தேர்தல்

    ஆந்திராவில் தேர்தல் நடந்த போது மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது. பல முக்கிய இடங்களில் இந்த பிரச்சனை நடந்தது. ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.

    இயந்திரங்கள் கோளாறு

    இயந்திரங்கள் கோளாறு

    அதேபோல் இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் வாக்களித்தால் , யாருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவிற்கு செல்கிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இது தொடர்பாக அவர் திமுக தலைவர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார். பிற மாநில தேர்தலிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ள்ளது என்று அவர் கூறி இருந்தார்.

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    இதோ அவர் எச்சரித்தது போலவே தற்போது பெரிய அளவில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாமல் போய் இருக்கிறது. முக்கியமான தொகுதிகள் பலவற்றில் இன்னும் வாக்குபதிவே தொடங்காத நிலை ஏற்பட்டு இருப்பதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அச்சம்

    அச்சம்

    இது மக்களிடையே கோபத்தை உண்டாக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் இப்படி வேலை செய்யாமல் போகிறது. இந்த பழுதுக்கு காரணம் என்ன. இதன் பின் சந்திரபாபு நாயுடு சொன்னது போல ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று பல கேள்விகளை மக்கள் எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.

    English summary
    Lok Sabha Election 2019: EVMs are not working in Tamilnadu as Chandrababu Naidu warned before.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X