அமித்ஷாவின் 2 நாள் தமிழக பிரசாரம் திடீர் ரத்து.. பின்னணி என்ன? சோகத்தில் பாஜக தலைவர்கள்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் என தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

இதில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 10 இடங்கள், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமமுகம், தேவநாதன் யாதவின் இமகமுக ஆகியோருக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது.
அதாவது நாளை டெல்லியில் இருந்து தமிழகம் வரும் அமித்ஷா மதுரையில் இறங்குகிறார். அதன்பிறகு மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை மறுநாள் (ஏப்ரல் 5ம் தேதி) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை தமிழகம் வர இருந்த அமித்ஷாவின் பிரசார திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அமித்ஷா இன்னொரு நாளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன் விபரம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications