கையிருப்பு 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
சென்னை: சிதம்பரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திருமாவளவன் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருமாவளவன் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் உள்ள விவரங்களை பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாளவன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது.

அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயியினி என்பவரும், அதிமுகவில் சந்திரஹாசன் என்பவரும் நாம் தமிழர் கட்சியில் ஜான்சி ராணியும் போட்டியிடுகிறார்கள். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமாவளவன் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
திருமாளவன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் திருமாவளவன் சமர்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்துக்கள் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:- திருமாவளவன் கையிருப்பில் ரொக்கமாக ரூ. 10,000 ரூபாய் உள்ளது. நான்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில், அண்ணா சாலையிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள கணக்கில் ஜிரோ பேலன்ஸ் உள்ளது.
அசோக் நகரில் உள்ள யூனியன் வங்கி கிளையில் 13,947 ரூபாய் உள்ளது. டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.3,22,595 ரூபாய் உள்ளது. அரியலூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.10,00,000 உள்ளது. தேர்தல் செலவுக்காக இந்த தொகை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், எஸ்பிஐ மியூட்சுவல் பண்டில் ரூ.74.58, 925 முதலீடு செய்து இருப்பதாகவும் திருமாவளவனின் வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. 32 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எண்டவர் கார் உள்பட மொத்தம் 4 வாகனங்கள் உள்ளன.
அதாவது, டெம்போ டிராவலர், இரண்டு டாடா சபாரி கார்கள், போர்டு எண்ட்ரோவர், ஹூண்டாய் க்ரேட்டா உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. மியூச்சுவல் பண்ட், இன்ஸூரன்ஸ் என அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 2,07,97,903 ரூபாயாக உள்ளது.
வேளாண் நிலங்கள் எதுவுமில்லை. சொந்த ஊரான அங்கனூரில் 25 செண்ட் மதிப்புள்ள குடியிருப்பு மனை உள்ளது. தாயார் பெரியம்மா பெயரில் 26 செண்ட் காலி மனை உள்ளது எனவும் திருமாவளவனின் வேட்பு மனுவில் கூறபட்டுள்ளது. திருமாவளவனின் அசையா சொத்துக்களின் (பூர்வீகம்) மொத்த மதிப்பு 28,62, 500 ரூபாய் ஆகும்.
அசையும் சொத்து - ரூ. 2,07,97,903
அசையா சொத்து - ரூ. 49 லட்சம்
கையிருப்பு - ரூ. 10,000.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications