வெறும் ரூ.8.40 கோடி தான்.. இதுதான் திமுக எம்பி தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு! 5 ஆண்டில் குறைந்து விட்டதாம்
சென்னை: சென்னை மத்திய தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சிட்டிங் எம்பி தயாநிதி மாறன் போட்டியிடும் நிலையில் அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு சரிந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்புமனு செய்துள்ளனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மத்திய சென்னை தொகுதியின் திமுக வேட்பாளரான சிட்டிங் எம்பி தயாநிதி மாறன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் இந்த தொகுதியில் 2004, 2009 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்பியாகி மத்திய அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2014 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் 2019 தேர்தலில் வென்றார். தற்போது மீண்டும் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தயாநிதி மாறனின் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி தயாநிதி மாறன் தனது கையில் ரூ.69,850 உள்ளதாகவும், மனைவி பிரியாவின் கையில் ரூ.55,480 ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தயாநிதி மாறன் 42 கிராம் தங்க நகைகள் உள்பட ரூ.10.57 லட்சம் மதிப்பிலான ஆபரணங்களை வைத்துள்ளார். அவரது மனைவி பிரியாவிடம் 2 கிலோ 502 கிராம் தங்க நகைகள், 18 கிலோ வெள்ளி பொருட்கள் என ரூ.2.79 கோடி ஆபரணங்கள் உள்ளன.
வாகனங்களை பொறுத்தவரை தயாநிதி மாறனிடம் டொயோட்டோ இனோவா கார் மட்டும் உள்ளது. பல்வேறு வங்கி சேமிப்பு, வைப்புத்தொகைகளை வைத்துள்ள தயாநிதி மாறனின் அசையும் சொத்தின் மதிப்பு என்பது 7.81 கோடியாகும். மனைவி பிரியாவிடம் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு என்பது ரூ.4.73 கோடியாகும். தயாநிதி மாறனிடம் அசையா சொத்தின் மதிப்பு ரூ.59 ஆயிரம் மட்டுமே ஆகும். மனைவி பிரியாவின் பெயரில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு ரூ.4.42 கோடியாகும். இந்த விபரங்கள் படி பார்த்தால் தயாநிதி மாறனிடம் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு என்பது 8.40 கோடி மட்டுமேயாகும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது தயாநிதி மாறன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவருக்கு ரூ.11.66 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.59 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications