தமிமுன் அன்சாரிக்கு காங்கிரஸ் அனுப்பிய தூது! அதிமுக வலையில் சிக்காத மஜக! காத்திருக்கும் ட்விஸ்ட்!
சென்னை: அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஐக்கியமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்டும் அதற்கு அணை போடும் விதமாக சத்தமில்லாமல் சம்பவம் செய்துள்ளது.
பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இழந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை மீண்டும் அதிமுகவுக்கு மீட்க தீவிரமாக வேலை செய்து வருகிறார். அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகளை திருப்ப மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆகிய 2 கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதில் பாதி வெற்றி தான் பெற்றிருக்கிறார். அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. மட்டும் உள்ளது. தமிமுன் அன்சாரி இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இதற்கு காரணம் காங்கிரஸ் தரப்பில் அனுப்பப்பட்ட தூது தான். திமுக தலைமையை விடுங்க, எங்களுக்காக இந்தியா கூட்டணியை தமிழ்நாட்டில் ஆதரிங்க என தமிமுன் அன்சாரியிடம் காங்கிரஸ் மேலிடப் முக்கிய பிரமுகர் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியிலோ அல்லது முன்னரோ ராகுலுடன் தமிமுன் அன்சாரியை சந்திக்க வைக்கவும் காங்கிரஸ் மேலிடப் பிரமுகர் ஏற்பாடு செய்து வருகிறாராம். இதனிடையே நாகை தொகுதியில் களமிறங்கும் யோசனையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா , அன்சாரியை தொடர்பு கொண்டு பேசி அதிமுக பக்கம் செல்லவே வேண்டாம் என கெஞ்சாத குறையாக கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரிக்காக மயிலாடுதுறை தொகுதியை கூட ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தயக்கம் காட்டுவதன் பின்னணி பற்றி விசாரித்ததில், தேர்தலுக்கு பிறகு ஒருவேளை அதிமுக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் அது தனக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும் என அன்சாரி கருதுவதாக மஜகவினர் கூறுகின்றனர். திமுகவுக்காக இல்லாவிட்டாலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக இந்தியா கூட்டணியை அன்சாரி ஆதரிப்பாரா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications