தொகுதி மாறிய திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட்! புதிய தொகுதிகள் என்னென்ன தெரியுமா?
சென்னை: மக்களவை தேர்தலில் இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், திமுக மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி மாறியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் களம் கோடை வெப்பத்தை விட தகிக்கிறது. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணி தனது தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது. இனி வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் உள்ளிட்டவைதான் பாக்கி!

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. ஏற்கெனவே ஐயூஎம்எல், கொங்கு மக்கள் தேசிய கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
இதனால் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் என்னவென தெரிய வந்துள்ளது. இந்த முறை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்டவை தொகுதி மாறியுள்ளது.
அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் போட்டியிட்ட கோவை தொகுதி இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்களுக்கு திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் காங்கிரஸ் போட்டியிடும் திருச்சி, ஆரணி, தேனி ஆகியவற்றை காங்கிரஸ் திமுகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக கடலூர், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.
அது போல் கடந்த முறை ஈரோடு எம்பி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சி தொகுதிக்கு மாறுகிறது. இவை தவிர்த்து மற்ற தொகுதிகள் எல்லாம் ஏற்கெனவே அந்தந்த கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்தான்.
திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்:
திமுக- 21
காங்கிரஸ்- 10
விசிக- 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
மதிமுக-1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1
மக்கள் நீதி மய்யம்- 1 மாநிலங்களவை சீட்
திமுக கூட்டணியில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
கம்யூனிஸ்ட் கட்சி- நாகை, திருப்பூர்
மார்க்சிஸ்ட் கட்சி- மதுரை, திண்டுக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி- சிதம்பரம், விழுப்புரம்
ஆகியவை ஆகும்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் :
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
சிவகங்கை
விருதுநகர்
கரூர்
கடலூர்
நெல்லை
மயிலாடுதுறை
கன்னியாகுமரி
புதுவை
மதிமுக போட்டியிடும் தொகுதி:
திருச்சிராப்பள்ளி
திமுக போட்டியிடும் தொகுதிகள்:
சேலம்
தருமபுரி
கோவை
பொள்ளாச்சி
நீலகிரி
ஈரோடு
பெரம்பலூர்
தஞ்சை
தென்காசி
தூத்துக்குடி
வடசென்னை
மத்திய சென்னை
தென் சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
ஆரணி
தேனி
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications