திமுக வேட்பாளர்கள் பட்டியல்: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 21 தொகுதிகளில் யார் யார்? இதோ லிஸ்ட்
சென்னை: லோக்சபா தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்பதூரில் டி ஆர்பாலு போட்டியிடுகிறார்.
நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த லோக்சபா தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதல், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது என உச்ச கட்ட பரபரப்பில் உள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்து விட்டது.
திமுக வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென் சென்னை - சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்
மத்திய செனனை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்பதூர் -டி ஆர்பாலு
காஞ்சிபுரம் (தனி) - ஜி செல்வம்
அரக்கோணம் - எஸ் ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர் ஆனந்த்
தர்மபுரி - ஆ மணி
திருவண்ணாமலை - சிஎன் அண்ணாதுரை
ஆரணி - எம்ஸ் தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
சேலம் - செல்வகணபதி
ஈரோடு - கே ஏ பிரகாஷ்
நீலகிரி(தனி) - ஆ ராசா
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி
பெரம்பலூர் - அருண் நேரு
தஞ்சாவூர் - முரசொலி
தேனி - தங்க தமிழ்செல்வன்
தென்காசி (தனி) - ராணி சிவக்குமார்
தூத்துக்குடி - கனிமொழி
திமுக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிபார்க்கப்பட்டது. இது போலவே 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
எனினும், உதயநிதியின் இந்த கோரிக்கை தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறியிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. தற்போது இதற்கெல்லாம் விடை கிடைத்திருக்கிறது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications