‘இந்தியா’ 270 ; பாஜக 240? மற்றவை 33! கருத்துக் கணிப்புகளைப் போட்டு உடைக்கும் Strike rate!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த காலத்தில் பாஜக பெற்ற செல்வாக்கை வைத்து அதன் வெற்றி வாய்ப்பு இந்த முறை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து ஒரு கருத்துக் கணிப்பு போடப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி முடிந்த பின்னர் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

lok sabha election 2024 INDIA alliance DMK alliance

மிகப் பிரபலமான 'இந்தியா டுடே' கருத்துக் கணிப்பின்படி பாஜக 380 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. அதாவது போட்டியிடும் 420 தொகுதிகளில் 380 கிடைக்கும் என்பது கணிப்பு.

'இந்தியா' கூட்டணி 149 தொகுதிகளையும் பிற கட்சிகள் 14 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அந்த சர்வே சொல்லி இருந்தது.

இந்தக் கணிப்பை எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிராகரித்துள்ளன. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளார். யாரும் எதிர்பாராத அளவில் தங்களின் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதைப் போல எதிர்க்கட்சிகள் பலவும் இதைக் கருத்து திணிப்பு என்று வர்ணித்து வருகின்றன. நடுநிலையான பத்திரிகையாளர்கள் சிலரும் பாஜக பற்றிய கணிப்பு தவறானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு Strike rate கணக்கைப் போட்டு எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துக் கூறியுள்ளார்.

அவரது கணிப்பை அப்படியே ஏற்க முடியுமா? என்பது வேறு விசயம். ஆனால், இந்திய அளவில் அவரது அரசியல் கணக்கு எப்படி உள்ளது என்பது முக்கியம்.

இது பற்றி தராசு ஷ்யாம் பேசுகையில், "இந்தக் கருத்துக் கணிப்புகளை நாம் லாஜிக்கலாகதான் அணுக முடியும். இங்கே யாருமே இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து கணிப்புகளை எல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால் இந்தியா அவ்வளவு பெரிய நாடு.

அப்படி என்றால், யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதைக் கணிக்கவே முடியாதா? ஓரளவு முடியும். வெற்றி விகிதாச்சாரத்தை வைத்துக் கணிக்கலாம். அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் Strike rate.

lok sabha election 2024 INDIA alliance DMK alliance

இந்த வெற்றி விகிதாச்சாரம் 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பாஜகவுக்கு எப்படி இருந்தது? அதைவைத்து 2024இல் எவ்வளவு இருக்கும்? என ஒரு தோராயமான கணக்குப் போடலாம். பாஜகவின் செல்வாக்கு 2019இல் இருந்ததைவிட இப்போது குறைந்துள்ளது. ஆனாலும், நான் 2019இல் இருந்த அதே Strike rate ஐ எடுத்துக் கொண்டு ஒரு கணிப்பைப் போட்டுப் பார்த்துள்ளேன்.

பாஜக 100% Strike rate பெறக்கூடிய மாநிலங்களாகக் குஜராத், மத்தியப் பிரதேசம், உபி ஆகியவற்றைச் சொல்லலாம். கடந்த முறை ராஜஸ்தானில் பெற்றுள்ளது. ஆனால், இம்முறை அது நடக்கவாய்ப்பு இல்லை.

பீகாரில் கடந்த முறை ஜேடி கட்சியுடன் கூட்டணி வைத்து 40 தொகுதிகளில் 39ஐ கைப்பற்றி இருந்தார்கள். இந்த முறை அது கஷ்டம். அப்படிப் பார்த்தால் Average Strike rate 50% என எடுத்து ஒரு தோராயமான கணக்கைப் போட்டுப் பார்க்கலாம். அப்படிக் கணக்கிட்டால், பாஜக மொத்தம் 420 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதன்படி 210 சீட்டுகளை பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளது.

அடுத்து என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கலாம். கடந்த 2019இல் மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகள் பாஜகவின் கூட்டணியிலிருந்தன. இந்த முறை அப்படி வலிமையான கட்சிகள் இல்லை.

ஆந்திராவில் மட்டும் சந்திரபாபு நாயுடு வலிமையாக இருக்கிறார். அவருடன் பவன் கல்யாண் இருக்கிறார். ஆகவே அங்கே கூடுதலாக 20 தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கலாம். கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து 30 சீட்டுகள் பெற்றாலும் பாஜக 240க்கும் மேல் போக வாய்ப்பு இல்லை. மீதம் 300 தொகுதிகள் இருக்கின்றன.

இந்த 300 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணியில் இல்லாத கட்சிகள் என ஒரு பட்டியல் போட்டால், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ். அடுத்து ஒடிசாவில் பிஜேடி. கடந்த காலங்களில் இந்த மூன்று கட்சிகளும் பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவுடன் நட்புறவைக் கடைப்பிடித்து வந்தன.

lok sabha election 2024 INDIA alliance DMK alliance

இந்தத் தேர்தல் காலகட்டத்தில் பாஜக பிரச்சாரத்தில் இந்த மூன்று கட்சிகளையும் மிகக் கடுமையாகப் பகைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, பாஜக கூட்டணிக்கு வென்றாலும் இந்தக் கட்சிகள் வராது. இந்த 3 கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 33 சீட்டுகளைப் பெறலாம்.

பாஜக 240 போக, மீதமுள்ள 300இல் இந்த 3 கட்சிகளுக்கும் 33 சீட்டுகளை ஒதுக்கிவிட்டால் பாக்கி 270 சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் இந்தியா கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இல்லை. ஆனால், அவர் உபியில் ஒரு தொகுதியில் மட்டும் இந்தியா கூட்டணி சார்பாகப் போட்டிப் போடுகிறார்.

ஆகவே, அவரை இந்தியா கூட்டணிக் கட்சியாகவே எடுத்துக்கொள்ளலாம். ஆம் ஆத்மி பஞ்சாபில் தனித்துப் போட்டிப் போடுகிறார்கள். இருந்தாலும் ஹரியானாவில் இந்தியா கூட்டணி சார்பில் ஒரு தொகுதியிலும் டெல்லியில் 4 தொகுதியிலும் போட்டியிடுகிறது. ஆக, இதுவும் இந்தியா கூட்டணிக் கட்சிக் கணக்கில்தான் வருகிறது.

ஆக, எப்படிச் சுற்றிச் சுற்றிக் கூட்டிக்கழித்தாலும் பாஜக 240 இடங்களை வெல்லலாம். இந்தியா கூட்டணி 270 சீட்டுகளை வெல்லலாம். மீதம் உள்ள கட்சிகள் 30 இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று ஒரு தெளிவான ப்ளூ பிரிண்டைப் போட்டுக் காட்டியுள்ளார்.

இந்தக் கணக்கு எந்தளவில் களத்தில் பிரதிபலிக்கும் என்பதை நாம் நாளைதான் பார்க்க வேண்டும். ஆயிரம் கணக்குகளை நாம் போட்டாலும் மக்கள் போடும் கணக்கு ஒவ்வொரு முறையும் பல மாற்றத்தைத் தந்துள்ளது என்பதுதான் தேர்தல் வரலாறு சொல்லும் பாடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+