மத்தியில் ஆட்சி மாற்றம்.. ‛இந்தியா’ கூட்டணிக்கு 290 சீட்.. பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த கருத்து கணிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது எனவும் தேசபந்து நாளிதழின் டிஜிட்டல் சேனல் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக உள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் நம் நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மத்தியில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 273 தொகுதிகளில் வெல்ல வேண்டும். 273 என்பது தான் லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் மேஜிக் நம்பராக உள்ளது.

இந்நிலையில் தான் நேற்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு செய்தி நிறுவனங்கள், கருத்து கணிப்பு மேற்கொள்ளும் அமைப்பினர் மக்களை நேரில் சந்தித்து எடுத்தது தான் இந்த கருத்து கணிப்பு.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்துள்ளன. எந்த கருத்து கணிப்புகளும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் முதல் முறையாக ஒரு கருத்து கணிப்பின் முடிவு என்பது ‛இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பை மேற்கொண்டது தேசபந்து நாளிதழின் டிஜிட்டல் சேனலாகும். இந்த கருத்து கணிப்பின்படி இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகள் தேவை என்ற நிலையில எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு அப்படியே நடக்கும் பட்சத்தில் மத்தியில் பாஜக ஆட்சியை இழக்கும் அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் இந்த கருத்து கணிப்பு முடிவு பாஜகவினருக்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில் மாநிலம் வாரியாக பார்த்தால் 80 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு 46 முதல் 48 இடங்களும், ‛இந்தியா' கூட்டணிக்கு 32 முதல் 38 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகள் உள்ளன நிலையில் ‛இந்தியா' கூட்டணிக்கு 25 முதல் 30 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 15 முதல் 20 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 18 முதல் 20 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 8 முதல் 12 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகள் உள்ள நிலையில் ‛இந்தியா' கூட்டணிக்கு 24 முதல் 26 சீட்டுகளும், பாஜக கூட்டணிக்கு 14 முதல் 16 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 26 முதல் 28 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதிகளில் 17 - 19 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 6 முதல் 8 இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications