Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 தேர்தலில் என் மகன் பெரியவனுக்கும் சீட்.. சீமான் பரபர அறிவிப்பு.. யாரை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெரிய மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்போவதாக அறிவித்துள்ளார். தஞ்சாவூர் நாதக வேட்பாளராகப் போட்டியிடும் ஹுமாயூனைக் குறிப்பிட்டு அவரின் மகனுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

Lok Sabha Election 2024 My elder son will run for MLA seat in 2026 says Naam Tamilar Seeman

மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை - டாக்டர் அமுதினி

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் - க.கனிமொழி

16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.

சீமான் பரபரப்பு பேச்சு: இந்த நிகழ்வில் பேசிய சீமான், இப்போது கட்சியில் சீனியர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களிடம் சொல்லிவிட்டேன்.. அடுத்த முறை சீட் கேட்டு வர வேண்டாம் என்று. 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் 150 இடங்களில் இளைஞர்களை நிறுத்தப் போகிறேன். அதில் என் மகன் பெரியவனுக்கும் சீட். அவனும் சரி என சொல்லிவிட்டான்.. அதனால் அவர் களமிறங்க போகிறார் என்று சீமான் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் நாதக வேட்பாளராகப் போட்டியிடும் ஹுமாயூனைக் குறிப்பிட்டு அவரின் மகனுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி அளித்த விளக்கத்தில், சீமான் "மூத்த மகனுக்குத் தேர்தலில் இடம்" என்று குறிப்பிட்டது அண்ணன் ஹுமாயூன் அவர்களது மூத்த மகனைத்தான்! ஆனால், சீமான் தனது மூத்த மகனைக் குறிப்பிட்டது போல செய்தி பரவுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+