இன்சூரன்ஸ் இல்லாத.. ஆடி ஏ4 காரில்! ஊர்வலமாக மனுதாக்கல் செய்தாரா? நாம் தமிழர் வேட்பாளர் விளக்கம்
சென்னை: இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த்தாக தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தன்னுடைய காருக்கு இன்சூரன்ஸ் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தெற்கு மக்களவைத் தொகுதி என்பது சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியவை இந்த தொகுதிக்கு கீழ் வரும்.

இந்த முறை தென் சென்னை தொகுதி ஸ்டார் வேட்பாளர் தொகுதி ஆகும். மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜே. ஜெயவர்த்தன் மீண்டும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். ஜே. ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். 2014 லோக்சபா தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தொழில் ரீதியாக மருத்துவராக உள்ளார்.
டாக்டர் ஜே ஜெயவர்தன் 26 வயதில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்று அப்போது பிரபலம் அடைந்தார்.
இப்போது மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் போட்டியிட உள்ள நிலையில்தான் ஜெயவர்த்தன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இது போக தமிழிசை சௌந்தரராஜன் இதே தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக சார்பாக இவர் களமிறங்குகிறார்.
ஸ்டார் தொகுதி: ஏற்கனவே இது ஸ்டார் தொகுதியாக உள்ள நிலையில், இங்கே களமிறங்கும் தமிழ்செல்வி எனப்படும் நாம் தமிழர் வேட்பாளரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்து தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவரின் காருக்கான இன்சூரன்ஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதமே முடிந்துவிட்டது. அதிகாரபூர்வ தளங்களில் கடந்த வருடமே இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதாக கூறப்பட்டாலும் தன்னுடைய காருக்கு இந்த வருடம் செப்டம்பர் வரை இன்சூரன்ஸ் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,
2. வடசென்னை - டாக்டர் அமுதினி
3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி
4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்
5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்
6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்
7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்
9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா
10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு
11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி
12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்
13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்
14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்
15. நாமக்கல் - க.கனிமொழி
16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்
17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி
18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்
19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்
20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்
21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்
22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா
23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்
24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி
25. கடலூர் - வே.மணிவாசகன்
26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி
27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்
28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா
29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்
30. சிவகங்கை - வி.எழிலரசி
31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி
32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்
33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்
34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்
35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்
36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்
37. திருநெல்வேலி - பா.சத்யா
38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்
39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்
40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications