சீமான் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கொடுத்தது தேர்தல் ஆணையம்! சபாஷ் சரியான தேர்வு!
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு கவனம் பெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021-ல் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக ஆட்டோ சின்னத்தை கேட்டது நாம் தமிழர் கட்சி. ஆனால் வேறு ஒரு கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க மீண்டும் ஏமாற்றமடைந்தார் சீமான்.
இந்நிலையில் கப்பல், படகு, மைக், தீப்பெட்டி, ஜன்னல், செருப்பு உள்ளிட்ட பல சின்னங்களை சீமான் தரப்பு பரிசீலனை செய்தது. இதில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைகளில் மைக் முன் நின்றாலே நரம்பு புடைக்க கைகளை உயர்த்தி பேசுவது வழக்கம். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் சீமான் பாணியில் மைக் முன்பு உரத்து பேசி முழக்கம் எழுப்புவர். இப்போது ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications