அசரவைத்த ‛இந்தியா’ கூட்டணி.. ‛ஸ்ட்ரைக்ரேட்டில்’ பாஜக கூட்டணியை நெறுங்கிடுச்சே.. திமுக மாஸ்
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ‛ஸ்ட்ரைக் ரேட்'டை ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் நெருங்கி உள்ளது. இதில்‛ஸ்ட்ரைக் ரேட்' என்றால் என்ன? அது எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 தொகுதிகளில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற இன்னும் 32 இடங்கள் தேவை என்பதால் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசத்துக்கு 16 எம்பிக்கள், நிதிஷ் குமாரின் ஜேடியுவுக்கு 12 எம்பிக்கள் உள்பட 13 கட்சிகளுக்கு மொத்தம் 52 எம்பிக்கள் உள்ளன. இதன்மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைகிறது. மீண்டும் பிரதமராக மோடி தேர்வாக உள்ளது.
அதேவேளையில் இந்த லோக்சபா தேர்தலில் உண்மையிலேயே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ‛இந்தியா' கூட்டணி கடும் போட்டியை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ‛இந்தியா' கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 99 இடங்களில் ஜெயித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 இடங்களிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 27 இடங்களிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைவராக உள்ள திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளின் ‛ஸ்ட்ரேக் ரேட்' தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ‛ஸ்ட்ரேக் ரேட்' என்பது தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் போட்டியிட்ட இடங்களில் எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை குறிக்கும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ‛ஸ்ட்ரைக் ரேட்' என்பது 54 சதவீதமாக உள்ளது. 543 தொகுதிகளில் அந்த கூட்டணி போட்டியிட்டு 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக ‛இந்தியா' கூட்டணியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 43 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த 2019ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டன. அந்த கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இந்த முறை ‛இந்தியா' கூட்டணி அசத்தி உள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கூட ‛இந்தியா' கூட்டணி மொத்தமாக 234 தொகுதிகளை ஜெயித்துள்ளது.
இனி என்டிஏ கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளின் ‛ஸ்ட்ரைக்ரேட்' விபரத்தை தனித்தனியாக பார்ப்போம். முதலாவதாக பாஜக பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 63 சீட் குறைவாகும். கடந்த 2019ல் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த முறை பாஜக போட்டியிட்ட இடங்கள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் பார்ததால் பாஜகவின் ‛ஸ்ட்ரைக் ரேட்' என்பது 54.42 சதவீதமாக உள்ளது.
அதேபோல் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி ஆந்திராவில் மொத்தமுள்ள 25 இடங்களில்16 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 94.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 2 இடங்களில் வென்றதால் ஸ்ட்ரைக் ரேட் 100 ஆக உள்ளது.
அதேபோல் பீகாரில் 40 தொகுதிகள் உள்ள நிலையில் சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டத. இந்த கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் சிராக் பஸ்வான் கட்சி ஸ்ட்ரைக் ரேட் 100 சதவீதமாக உள்ளது. மேலும் பீகாரில் 16 இடங்களில் களமிறங்கிய நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் 75 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிரவில் 48 தொகுதிகளில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசனோ 15 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் வென்றது. அந்த கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 46.6 சதவீதமாக உள்ளது. அதேபோல் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஒரு சீட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 25 சதவீதமாக உள்ளது.
இந்தியாவை கூட்டணியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2019 லோக்சபா தேர்தலை ஒப்பிடும்போது 47 தொகுதிகள் அதிகமாகும். அந்த வகையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 30.18 சதவீதமாக உள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 60.42 சதவீதமாக உள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 63 தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. அதில் 37 இடங்களில் வென்றது. அந்த கட்சியின் ஸ்ட்ரைக் ரேட் 52.11 சதவீதமாக உள்ளது. இங்கு சமாஜ்வாதி கட்சியின் ஓட்டு சதவீதம் என்பது கடந்த 2019ல் 18.11 சதவீதமாக இருந்தது. இது தற்போது 33.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வென்றது. இதன்மூலம் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 42.8 சதவீதமாக உள்ளது. அதேபோல் சரத்பவாரின் தேசிவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் ஸ்ட்ரைக் ரேட் என்பது 80 சதவீதமாக உள்ளது.
மேலும் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 22 இடங்களில் திமுக போட்டியிட்டது. மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. இதன்மூலம் திமுகவின் ஸ்ட்ரைக் ரேட் என்பது 100 ஆக உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications