5 முறை முதல்வர்; 24 வருட ஆட்சி! பாஜகவுக்குச் சரியான எதிரி? சைலண்ட் நாயகன் நவீன் பட்நாயக்!
சென்னை: ஒவ்வொரு தேர்தலின் போது நவீன் பட்நாயக் உடல்நிலை பற்றிய வதந்தி வலம் வருகிறது. ஆனால், அதை அனைத்தையும் முறியடித்து அவர் 5 முறை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். 6 ஆவது முறையாக அவர் பதவி ஏற்றால் அது இந்திய அரசியலில் யாருமே செய்யாத சாதனையாக அமையும்.
நாடு முழுவதும் உள்ள அரசியல் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த 2000 ஆம் ஆண்டு இம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்ற பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்.

பப்பு டூ அரசியல்வாதி வரை:
நவீன் பட்நாயக் ஏற்கெனவே அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்று பெயர் எடுத்த மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்துவிட்டார்.
இப்போது பட்நாயக் மீண்டு 6வது முறையாக ஒடிசா முதல்வராகப் பொறுப்பேற்றால் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்பிங்கின் சாதனையையும் சரிக்கட்டி விடுவார். அப்படி ஒரு நிலை உருவானால், இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பட்நாயக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்.
ஆனால், இந்த முறை நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராக வர மாட்டார் என்று அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இவருடன் கடும் மோதலில் இறங்கியுள்ளனர்.
பாஜகவின் ஆதரவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நவீன் பட்நாயக்கின் அரசியல் எதிரியாக அதே பாஜக களம் இறங்கியுள்ளது.

ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி:
நவீன் பட்நாயக் ஒரு ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி. இவரது அப்பா பிஜு பட்நாயக் இவருக்கு முன்னதாக ஒடிசா முதல்வராக இருந்தவர். அப்பாவின் அடியை ஒட்டி அரசியல் வாழ்க்கையை இவர் தொடங்குவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரால் 'பப்பு' என்று அழைக்கப்பட்டார்.
அந்தளவுக்கு அப்பாவியாக இளமைக் காலத்தில் வலம் வந்த நவீன் பட்நாயக் இன்று இந்தியாவே வியக்கும் ஒரு அரசியல் தலைவர்.
நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு 1997இல் மறைந்தார். அதுவரை வீட்டுப் பிள்ளையாக இருந்த நவீனை அரசியல் உலகம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. தந்தையின் மறைவால் காலியாக அறிவிக்கப்பட்ட அஸ்கா மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் நவீன்.
அதன் பின்னர் தந்தையின் ஜனதா தளம் கட்சியைப் பிரித்து பிஜு ஜனதா தளத்தை நிறுவினார் இந்தப் பப்பு. அதற்கு அடுத்த 1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதன் மூலம் நவீன் பட்நாயக் 1998 ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாயின் அரசில் மத்திய அமைச்சரானார். இது 2000 வரை தொடர்ந்தது.

ஜேபி பட்நாயக்கின் வீழ்ச்சி:
இவர் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒடிசா முதல்வராக ஜேபி பட்நாயக் இருந்தார். அதாவது ஜானகி பல்லப் பட்நாயக். நவீன் பட்நாயக்கிற்கு முன்னதாக அதிக காலம் முதல்வராக இருந்த பெருமை இவரையே சேரும்.
1999இல் ஜேபி பட்நாயக் ஆட்சி பல சர்ச்சைகளில் சிக்கியது. பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதற்கு அடுத்து மாநிலத்தில் வீசிய சூறாவளியைச் சரியாகக் கையாளாமல் தடுமாறியது அவப்பெயரை உண்டாக்கிக் கொடுத்தது. இதனால் மாநில மக்களின் நாயகனாக இருந்த ஜேபி பட்நாயக் வில்லனாக மாறினார். திறமையற்ற நிர்வாகத்தைச் செய்து வந்த ஜேபியை ஆட்சியிலிருந்து இறக்க அம்மாநில மக்கள் முடிவு செய்தனர்.
அடுத்து யார் மீது நம்பிக்கை வைக்கலாம் எனத் தடுமாறிய பொதுமக்கள் கண்களில் நம்பிக்கை நாயகனாகத் தெரிந்தார் நவீன் பட்நாயக். அவர் மீது மக்கள் கவனம் சென்றது. மத்திய பதவியைவிட்டு விட்டு மாநில அரசியலில் காலடி எடுத்து வைத்தார் நவீன்.
இதற்கான முதல் அடித்தளம் 2000இல் போடப்பட்டது. அன்று தொடங்கி, இன்றுவரை 5 முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நவீன்.
இந்த 24 ஆண்டுகளில் ஒடிசா பல துறைகளில் முன்னேறி இருக்கிறது. குறிப்பாக அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் ஒடிசாவை மிகத் திறமையாகக் கையாண்டார் நவீன்.

ஒடிசாவின் நவீன முகம் நவீன்:
அடுத்து ஒடிசாவை இந்தியாவின் ஹாக்கி தலைநகராக மாற்றியுள்ளார். மாநிலத்தில் சாலைகள் மிகத் தரமாக மாற்றப்பட்டுள்ளன. இவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட '5T model' வெளிப்படைத் தன்மை கொண்ட அரசு நிர்வாகத்தைத் தந்துள்ளது.
அரசுப் பள்ளிகள் முதல் தலைமைச் செயலகம் வரை மாடர்ன் ஆக மாற்றப்பட்டுள்ளன. உயர்நிலைப் பள்ளிகள் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
உடல்நிலை பற்றிய வதந்திகள்:
ஒடிசா மாநிலம் ஒரு சிறப்பு வாய்ந்த கோயில் நகரம். அதை உணர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் நவீனமான உள்கட்டமைப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.
அதேசமயம், மிகக்குறைவாக உள்ள சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் தான் ஒரு மதச்சார்பற்றவன் என்ற பிம்பத்தைத் தக்க இவர் வைத்துக் கொண்டார். .
பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக சூப்பர் கிளீன் இமேஜை தக்கவைத்து வருகிறார். சிட் ஃபண்ட், சுரங்க ஊழல் தொடர்பாக இவரது ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், அதிலிருந்து தப்பித்து தனது இமேஜை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
ஒடிசா அரசியல் பற்றிய விவாதங்களில் இரண்டு கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. இப்போது கூட நவீன் உடல்நிலை பற்றி விசாரணை செய்யப்படும் என்று மோடி பேசி இருந்தார்.
அதாவது 77 வயதான பட்நாயக்கின் உடல்நிலை எப்படி உள்ளது? அவருக்குப் பிறகு அவரது அரசியல் வாரிசு யார்? அந்த வாரிசாக விகே பாண்டியன் இருப்பார் எனக் கூறப்பட்டது. அதற்குத்தான் நவீன் பட்நாயக் இப்போது உடைத்துப் பேசி உண்மையைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நவீன் பட்நாயக் ஒரு சுயம்பு:
கடந்த டிசம்பரில் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, "ஒடிசாவின் தாய்க்குலங்கள், சகோதரிகள் விரும்பினால், பிஜேடி 25 அல்லது 50 ஆண்டுகள் அல்ல, அடுத்த 100 ஆண்டுகள் வரை இருக்கும்" என்றார் நவீன் பட்நாயக்.
1997 அஸ்கா இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு பட்நாயக் இதுவரை ஒரு தேர்தலில் கூட தோற்கவில்லை, ஆனால் இவரது தந்தை தொடர் தோல்விகளைச் சந்தித்தார். அரசியலைப் பொறுத்தவரை நவீன் பட்நாயக் சுயம்பு. இவரது தந்தை பிஜு பட்நாயக் தனது மகனை அரசியலுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், தந்தையும் பெயர்தான் இவரது அடையாளம் என்பது மறுப்பதற்கு இல்லை.
இந்த முறை சர்ச்சைகளைக் கடந்து நவீன் பட்நாயக் வெற்றி பெற்றால், இந்திய அரசியல் சரித்திரத்தில் அவர் ஒரு துருவ நட்சத்திரமாக ஜொலிப்பார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications