தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 72.09% வாக்குப்பதிவு.. மாநிலத்திலேயே “டாப்” எந்த தொகுதி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியிலும் இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக மாலை 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதியான விவரங்கள் சற்று நேரத்தில் வெளியாகும்.
18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 10.92 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை ஆறு மணிக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்பவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1,58,568 வாக்குபதிவு எந்திரங்களும் 81,157 கட்டுபாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 183 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்த 40 தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த 4 முனை போட்டியில் வெற்றி வாகை சூடுவது யார் என்பது 7 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பின்னர் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10%, தருமபுரியில் 15.04% வாக்குகள் பதிவாகின.
9 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:
திருவள்ளூர் 12.31%
வட சென்னை 9.73%
தென் சென்னை 10.08%
மத்திய சென்னை 8.59%
திருப்பெரும்புதூர்11.18%
காஞ்சிபுரம் 12.25%
அரக்கோணம் 12.64%
வேலூர் 12.76%
கிருஷ்ணகிரி 12.57%
தருமபுரி 15.04%
திருவண்ணாமலை 12.80%
ஆரணி 12.69%
விழுப்புரம் 13.97%
கள்ளக்குறிச்சி 15.10%
சேலம் 14.79%
நாமக்கல் 14.36%
ஈரோடு 13.37%
திருப்பூர் 13.13%
நீலகிரி 12.18%
கோயம்புத்தூர் 12.16%
பொள்ளாச்சி13.36%
திண்டுக்கல்13.16%
கரூர் 14.41%
திருச்சிராப்பள்ளி 11.82%
பெரம்பலூர் 14.35%
கடலூர் 12.22%
சிதம்பரம் 12.90%
மயிலாடுதுறை 12.08%
நாகப்பட்டினம் 12.98%
தஞ்சாவூர் 12.91%
சிவகங்கை 12.06%
மதுரை 11.00%
தேனி 13.15%
விருதுநகர் 13.05%
ராமநாதபுரம் 11.79%
தூத்துக்குடி 11.62%
தென்காசி 11.82%
திருநெல்வேலி 11.39%
கன்னியாகுமரி 11.92%
மொத்தம் 12.55%
முற்பகல் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு:
கள்ளக்குறிச்சி 26.58%
திண்டுக்கல் 26.34%
நாமக்கல் 26.07%
கரூர் 26.07%
சேலம் 25.97%
விழுப்புரம் 25.69%
தருமபுரி 25.66%
பெரம்பலூர் 25.62%
ஆரணி 25.53%
திருப்பூர் 25.47%
விருதுநகர் 25.39%
ஈரோடு 25.37%
சிதம்பரம் 25.35%
பொள்ளாச்சி 25.02%
தேனி 24.99%
தஞ்சாவூர் 24.96%
திருவள்ளூர் 24.93%
திருவண்ணாமலை 24.92%
நாகப்பட்டினம் 24.92%
கிருஷ்ணகிரி 24.82%
மயிலாடுதுறை 24.76%
அரக்கோணம் 24.71%
திருச்சி 24.7%
கன்னியாகுமரி 24.68%
வேலூர் 24.67%
கடலூர் 24.66%
காஞ்சிபுரம் 24.65%
தென்காசி 24.51%
சிவகங்கை 24.47%
தூத்துக்குடி 24.16%
நீலகிரி 24.00%
ராமநாதபுரம் 23.89%
திருநெல்வேலி 23.78%
ஸ்ரீபெரும்புதூர் 23.53%
மதுரை 22.72%
வடசென்னை 22.05%
தென் சென்னை 21.97%
மத்திய சென்னை 20.09%
வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம்:
தமிழ்நாட்டில் பகல் 1 மணி நிலவரப்படி 40.05 % வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி லோக்சபா தொகுதியில் 44.08% சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் 32.31% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தருமபுரி 44.08%
கள்ளக்குறிச்சி 44%
நாமக்கல் 43.66%
ஆரணி 43.62%
கரூர் 43.60%
பெரம்பலூர் 43.32%
சேலம் 43.13%
விழுப்புரம் 42.89%
ஈரோடு 42.23%
சிதம்பரம் 42.09%
திண்டுக்கல் 41.97%
அரக்கோணம் 41.92%
கிருஷ்ணகிரி 41.55%
திருவண்ணாமலை 41.46%
நாகப்பட்டினம் 41.43%
பொள்ளாச்சி 41.34%
வேலூர் 41.24%
தேனி 41.24%
திருப்பூர் 40.96%
தஞ்சாவூர் 40.81%
மயிலாடுதுறை 40.77%
கடலூர் 40.32%
கன்னியாகுமரி 40.24%
சிவகங்கை 40.15%
தென்காசி 40.15%
நீலகிரி 40.14%
திருவள்ளூர் 40.12%
திருச்சி 39.91%
ராமநாதபுரம் 39.60%
கோவை 39.51%
காஞ்சிபுரம் 39.41%
தூத்துக்குடி 39.06%
நெல்லை 38.27%
ஸ்ரீபெரும்புதூர் 37.40%
மதுரை 37.11%
வடசென்னை 35.09%
தென் சென்னை 33.93%
மத்திய சென்னை 32.31%

3 மணி அப்டேட்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 58.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. தருமபுரி, நாமக்கல்லில் 58% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தருமபுரி - 57.86%, நாமக்கல் - 57.67%, கள்ளக்குறிச்சி - 57.34%, நீலகிரி - 53.02%, அரக்கோணம் - 51.98%, கடலூர் - 50.94%, மயிலாடுதுறை - 50.91%, தேனி - 51.43%, வேலூர் - 51.19%, தென் சென்னை - 42.10%, வட சென்னை - 44.84%, மத்திய சென்னை - 41.47% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிகள் தான் வாக்குப்பதிவில் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளன. மிகவும் குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 41.47% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
3 மணி நிலவரம்:
தருமபுரி 57.86%
நாமக்கல் 57.67%
கள்ளக்குறிச்சி 57.34%
ஆரணி 56.73%
கரூர் 56.65%
பெரம்பலூர் 56.34%
சேலம் 55.53%
சிதம்பரம் 55.53%
விழுப்புரம் 54.43%
ஈரோடு 54.13%
திருவண்ணாமலை 53.72%
விருதுநகர் 53.45%
திண்டுக்கல் 53.43%
கிருஷ்ணகிரி 53.57%
வேலூர் 53.17%
பொள்ளாச்சி 53.14%
நாகப்பட்டினம் 52.72%
தேனி 53.52%
நீலகிரி 52.49%
கடலூர் 52.13%
தஞ்சாவூர் 52.02%
மயிலாடுதுறை 52%
சிவகங்கை 51.79%
தென்காசி 51.45%
ராமநாதபுரம் 51.16%
கன்னியாகுமரி 51.12%
திருப்பூர்51.07%
திருச்சி-50.71%
தூத்துக்குடி- 50.41%
கோவை- 50.33%
காஞ்சிபுரம்- 49.94%
திருவள்ளூர்- 49.82%
திருநெல்வேலி 48.58%
மதுரை- 47.38%
ஸ்ரீபெரும்புதூர்- 45.96%
வடசென்னை 44.84%
தென் சென்னை 42.10%
மத்திய சென்னை 41.47%
5 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரியிலும் குறைந்தபட்சமாக தென் சென்னையிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 5 மணி நிலவரப்படி
தருமபுரி 67.52%
நாமக்கல் 67.37%
ஆரணி 67.34%
கள்ளக்குறிச்சி 67.23%
கரூர் 66.91%
சிதம்பரம் 66.64%
பெரம்பலூர் 66.56%
திருவண்ணாமலை 65.91%
சேலம் 65.86%
அரக்கோணம் 65.61%
வேலூர் 65.12%
விழுப்புரம் 64.83%
கிருஷ்ணகிரி 64.65%
ஈரோடு 64.50%
திண்டுக்கல் 64.34%
நாகை 64.21%
கடலூர் 64.10%
நீலகிரி 63.88%
விருதுநகர் 63.85%
பொள்ளாச்சி 63.53%
தேனி 63.41%
தென்காசி 63.10%
தூத்துக்குடி 63.03%
ராமநாதபுரம் 63.02%
தஞ்சாவூர் 63%
கன்னியாகுமரி 62.82%
சிவகங்கை 62.50%
திருச்சி 62.30%
காஞ்சிபுரம் 61.74%
திருவள்ளூர் 61.59%
கோவை 61.45%
திருப்பூர் 61.43%
நெல்லை-61.29%
மதுரை 60%
ஸ்ரீபெரும்புதூர்- 59.82%
வடசென்னை 59.16%
மத்திய சென்னை 57.25%
தென் சென்னை 57.04%

7 மணி நிலவரம்:
தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் உள்ள ஒருசில வாக்குச்சாவடிகளில் தாமதம் காரணமாக வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது. 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 75.67 % வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முழுமையான விவரங்கள் விரைவில் கிடைக்கப்பெறும்.
கள்ளக்குறிச்சி 75.67%;தருமபுரி 75.44%; சிதம்பரம் 74.87%; பெரம்பலூர் 74.46%;
நாமக்கல் 74.29%; கரூர்- 74.05%; அரக்கோணம் 73.92%; ஆரணி 73.77%;
சேலம் 73.55%; விழுப்புரம் 73.49%; திருவண்ணாமலை 73.35%
வேலூர் 73.04%; காஞ்சிபுரம் 72.99%; கிருஷ்ணகிரி 72.96%; கடலூர் 72.40%; விருதுநகர் 72.29%; பொள்ளாச்சி 72.22%; நாகப்பட்டினம் 72.21%; திருப்பூர் 72.02%; திருவள்ளூர்- 71.87%; தேனி 71.74%; மயிலாடுதுறை 71.45%; ஈரோடு 71.42%; திண்டுக்கல் 71.37%; திருச்சி 71.20%; கோவை 71.17%; நீலகிரி 71.07%; தென்காசி 71.06%; சிவகங்கை 71.05%; ராமநாதபுரம் 71.05% ; தூத்துக்குடி 70.93%; நெல்லை 70.46%; கன்னியாகுமரி 70.15%; தஞ்சாவூர் 69.82%; ஸ்ரீபெரும்புதூர் 69.79%; வடசென்னை 69.26%; மதுரை 68.98%; தென்சென்னை 67.82%; மத்திய சென்னை 67.35%
தமிழ்நாட்டின் மொத்த வாக்குப் பதிவு (இரவு 7 மணி நிலவரப்படி) 72.09%












Click it and Unblock the Notifications